பிரதமர் ரணில் ராஜபக்சாக்களின் பிரதிநிதியாக செயற்படுகின்றார் - இராதாகிருஷ்ணன்

Published By: Digital Desk 5

14 May, 2022 | 11:19 AM
image

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின் கோரிக்கை. அந்த கோரிக்கையை ஏற்றே ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் பதவியை ஏற்கவில்லை. 

Nuwara-Eliya-District-MP-Mr.-Radhakrishnan | Srilankan Times

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்சக்களின் பிரதிநிதியாகசெயற்படுகின்றார். அவர் ராஜபக்சக்களுக்கு விலைபோய் விட்டார். 

ஆதலால் அவருக்கு ஆதரவு வழங்க முடியாது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ.இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார்.

நுவரெலியாவில் வெள்ளிக்கிழமை (13) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்இவ்வாறு கூறினார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,ரணில் விக்கிரமசிங்க இந்நாட்டில் 5 தடவைகள் பிரதமர் பதவியை வகித்தவர்.

இம்முறை 6 ஆவது தடவையாகவும் பதவியேற்றுள்ளார். எனினும், எந்தவொரு முறையும் தனது பதவி காலத்தை அவர் முழுமையாக பூர்த்தி செய்தது கிடையாது.

கடந்த பொதுத்தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில்விக்கிரமசிங்கவால் 20 ஆயிரம் வாக்குகளைக்கூட பெறமுடியாமல்போனது. 

தேசியபட்டியல் ஊடாக பாராளுமன்றம் வந்தார். அவருக்கு மக்கள் ஆணை இல்லை.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்பதே நாட்டு மக்களின்கோரிக்கை. 

அந்த கோரிக்கையை ஏற்றே ஐக்கிய மக்கள் சக்தி பிரதமர் பதவியைஏற்கவில்லை. ஜனாதிபதி பதவி விலகினால்தான் ஆட்சி பொறுப்பேற்கப் படும் எனஅறிவிக்கப்பட்டது.  

ஜே.வி.பியும் இதே நிலைப்பாட்டில்தான் உள்ளது.ஆனால்  ராஜபக்சக்களுடன் ரணில் இணைந்துள்ளார். 

மொட்டு கட்சி ஆட்சிதான்வரபோகின்றது. ராஜபக்ச போய், ரணில் வந்துள்ளார். இதுதான் ஏற்பட்டுள்ளமாற்றம். 

இதனை மக்கள் ஏற்கமாட்டார்கள்.நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடும்போது, ரணிலுக்குபெரும்பான்மை உள்ளதா என்பது தெரியவரும். 

புதிய அரசில் இணையமாட்டோம்.அமைச்சுப் பதவிகளை ஏற்கமாட்டோம். எதிரணியில் இருந்து செயற்படுவோம்.ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். 

ரணில்விலைபோய்விட்டார். ராஜபக்சக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார்.இவருடன் இணைத்து கூத்தடிக்க முடியாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் நாளைய வெப்பமான காலநிலை தொடர்பில்...

2024-03-03 17:37:58
news-image

யாழ். வடமராட்சியை சென்றடைந்தது சாந்தனின் புகழுடல்...

2024-03-03 17:52:54
news-image

இந்தியாவின் மாநிலமாக இலங்கையை மாற்றியமைக்கும் முயற்சிகளுக்கு...

2024-03-03 17:23:31
news-image

கசினோவில் தோற்றதால் போதைப்பொருள் கடத்தல் குழுவுடன்...

2024-03-03 17:27:00
news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸில் இணைக்கப்பட்டுள்ள இரண்டு பெல்ஜியம்...

2024-03-03 16:45:13
news-image

'அரசியல்மயப்படுத்தப்பட்ட மனித உரிமைகளுக்கு' துணைபோகும் இரட்டை...

2024-03-03 16:11:58
news-image

பயங்கரவாத தடைச் சட்டத்தை பதிலீடு செய்வதில்...

2024-03-03 15:55:24
news-image

மட்டக்களப்பு - நாவலடியில் விபத்து :...

2024-03-03 15:42:03
news-image

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் தாக்குதல்: மூவர் படுகாயம்,...

2024-03-03 15:29:44
news-image

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியை மறித்த...

2024-03-03 15:12:34
news-image

சாந்தனின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்...

2024-03-03 15:01:07
news-image

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை...

2024-03-03 14:46:29