இருந்த அரசாங்கத்தைவிட பலம் மிக்க அரசாங்கத்தை அமைப்போம் - ஐக்கிய தேசிய கட்சி நம்பிக்கை

Published By: Digital Desk 5

14 May, 2022 | 11:09 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் அதனை மீள கட்டியெழுப்ப யாரும் ஏற்றுக்கொள்ளாத சவாலை  பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். 

United National Party digital election campaign launched | Daily News

அதனால்  மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நாட்டை நேசிக்க அனைவரும்  ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகிரவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

அத்துடன் இருந்த அரசாங்கத்தைவிட பலம் மிக்க அரசாங்கம் ஒன்றை அமைப்போம். பாராளுமன்றத்தில் 124 உறுப்பினர்களின் ஆதரவு எமக்கு இருக்கின்றது எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பி்ட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்ககையில்,

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ் பதவி விலகிய பின்னர், பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் யாரும் முன்வராத நிலையில் அனுபவமுள்ள தலைவர் என்றவகையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் குறிப்பிட்டதொரு காலத்துக்கு பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளார்.  

நாடு எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு ஒரளவேனும் தீர்வுகண்ட பின்னர் தேர்தலுக்கு சென்று அரசாங்கம் அமைத்துக்கொள்ளலாம்.   

அதனால்  மக்களின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு நாட்டை நேசிக்க அனைவரும்  ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வரவேண்டும்.

அத்துடன் நாட்டின் அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். 

இந்நிலையில் தொடர்ந்து இவ்வாறு நாட்டை முன்னுக்கு கொண்டு செல்லமுடியாது. 

அரசியல் ஸ்திரநிலைமையை ஏற்படுத்தாவிட்டால்  ஆளுநர் பதவியில் இருந்து விலகுவதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார். 

இவ்வாறான நிலையில் யாரும் ஏற்றுக்கொள்ளாத சவாலை ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் தற்போது டொலரின் பெறுமதி குறைய ஆரம்பித்திருக்கின்றது. 

அடுத்ததாக எரிபொருளின் விலையை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டி இருக்கி்னறது. 

நாடு எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கு உடனடியாக தீர்வுகாண முடியாது. படிப்படியாக நடவடிக்கை எடுப்போம். 

அதற்காக இருந்த அரசாங்கத்தைவிடவும் பலம் மிக்க அரசாங்கத்தை நாங்கள் அமைப்போம். அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய அமைச்சரவையும் விரைவில் நியமிக்கப்படும். 

அந்த அமைச்சரவை சம்பிரதாய முறையான அமைச்சரவையாக இருக்காது. 

எந்த வரப்பிரசாதங்களும் அதில் எதிர்பார்க்க முடியாது.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துக்கு பெரும்பான்மை தொடர்பில் நாங்கள் அலட்டிக்கொள்ளவில்லை.

எங்களுக்கு 124 உறுப்பினர்களின் ஆதரவு தற்போதைக்கு இருக்கின்றது. அதனால் சவால்களை வெற்றிகொள்ள முடியுமான வேலைத்திட்டங்களை நாங்கள் அமைத்திருக்கின்றோம். 

இது ஐக்கிய தேசிய அரசாங்கம் அல்ல மாறாக மக்கள் மயமான அரசாங்கமாகும். அதனால் நாங்கள் எதிர்பார்த்ததைவிட நல்ல அரசாங்கத்தை அமைக்க முடியும் என்ற நம்பிக்கை தற்போது எமக்கு இருக்கின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47