ராஜபக்ஷ அரசாங்கத்தின் திருடர்களைப் பிடிக்க விரைவில் நடவடிக்கை - அகிலவிராஜ்

Published By: Digital Desk 5

14 May, 2022 | 10:45 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

ராஜபக்ஷ் அரசாங்கத்தின் திருடர்களை சட்டத்துக்கு முன் நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்.

Akila Viraj resigns as UNP General Secretary | Daily News

 அதில் எந்த மாற்றமும் இல்லை என ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில்  இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது கேட்கப்பட்ட கேள்வியொன்று பதிலளிக்கையிலேயே  இவ்வாறு குறிப்பி்ட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவி்ககையில்,

ராஜபக்ஷ்வினரின் திருட்டு நடவடிக்கைகளுக்கு கடந்த காலங்களில்  நடவடிக்கை எடுக்காமல் அவர்களை பாதுகாப்பதற்கு ஐக்கிய தேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவந்தது என்ற குற்றச்சாட்டு இருந்தது.

 என்றாலும் யாரையும் பாதுகாக்க நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. திருடர்கள் மற்றும் மோசடிகாரர்களுக்கு எதிராக சட்ட ரீதியிலேயே நடவடிக்கைகளை எடுத்தோம்.

தற்போதும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி ஏற்றிருக்கின்றார். அதனால் திருடர்களை பாதுகாக்க ஒருபோதும் நடவடிக்கை எடுக்கப்போவதில்லை. 

திருடர்களை சட்டத்துக்கு முன் நிறுத்தும் வேலைத்திட்டத்தை நாங்கள் செய்வோம். இதுதொடர்பாக சட்டத்தரணிகள் சங்கத்தின் பல்வேறு கருத்துக்கள் இருக்கின்றன. 

அதுதொடர்பாகவும் ஆராய்ந்து எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்போம்.  அதன் பொறுப்புகள் அவர்களுக்கும் வழங்கும் வகையில் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்க இருக்கின்றோம்.

அத்துடன் மோசடி, திருட்டுக்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் அரசாங்கத்துக்கு ஆதரவளித்தாலும் அனைவருக்கும் ஒருமாதிரியே நடவடிக்கை எடுக்கப்படும். 

கடந்த காலங்களில்போன்று அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பவரை பாதுகாக்கவும் எதிராக இருப்பவர்களின் மோசடிகளை மாத்திரம் கண்டுபிடித்து தண்டனை வழங்கும் நடவடிக்கைகள் தற்போது முடியாது. 

மக்களுக்கு இந்த நடவடிக்கைகள் அனைத்தும் தெரியும். என்றாலும் கடந்த அரசாங்கத்தில் பலருக்கு நீதிமன்றங்களில் விடுவித்து விடுதலை செய்திருக்கின்றது. 

அவ்வாறான தீர்ப்புக்களை மீண்டும் சவாலுக்கு உட்படுத்த எமக்கு அதிகாரம் இல்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் : வீதியில்...

2024-06-19 03:27:32
news-image

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தமிழ்த்...

2024-06-19 02:29:31
news-image

அதிக வருமானம் ஈட்டுவோருக்கே வாடகை வரி ...

2024-06-19 02:26:15
news-image

தெரிவுக்குழு அமைப்பதில் உடன்பாடு இல்லை; எதிர்க்கட்சித்...

2024-06-19 02:18:38
news-image

கடல் நீரில் மூழ்கிய இளைஞன்; ஆபத்தான...

2024-06-19 02:13:43
news-image

வரிப் பணத்தை முறையாக அறவிட்டால் புதிய...

2024-06-18 15:21:30
news-image

ஒரு நாள் இரவு காட்டில் வாழ்ந்த...

2024-06-19 01:28:05
news-image

உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றுத்துறை விமர்சிப்பது...

2024-06-18 15:08:11
news-image

களுபோவில வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலையில் மனித பாவனைக்குதவாத...

2024-06-18 21:41:13
news-image

இலங்கை வரவுள்ள சீன இராணுவ மருத்துவக்...

2024-06-18 14:47:35
news-image

கோட்டாவின் பாவத்தை ரணில் தூய்மைப்படுத்துகிறார் -...

2024-06-18 17:27:30
news-image

பௌத்த மதத்தின் இருப்புக்கு தீங்கு விளைவிக்கும்...

2024-06-18 20:03:37