இந்தியாவின் டெல்லியிலுள்ள வணிக வளாகமொன்றில் ஏற்பட்ட தீயில் சிக்கி 27 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.

Image

இந்தியாவின் டெல்லியின் முண்ட்கா மெட்ரோ ரெயில் நிலையம் அருகே நேற்று மாலை  வணிகக் கட்டிடத்தில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

Image

இந்நிலையில் டெல்லி தீ விபத்தில் இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார். 

Image

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர்,

 “இது மிகவும் வருத்தமான சம்பவம். முண்ட்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள 4 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதுவரை 27 உடல்கள் மீட்கப்பட்டு 8 பேர் படு காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறினார்.

Image

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் துணை ஆணையர் (வெளி மாவட்டம்) சமீர் ஷர்மா கூறுகையில்,

“இதுவரை 50 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன” என்று அவர் தெரிவித்தார்.

Image

இந்நிலையில் டெல்லி வணிக கட்டிட தீ விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாவும் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 

Image