( எம்.எப்.எம்.பஸீர்)
கேகாலை மாவட்டம் - ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை துப்பாக்கிப் பிரயோகம் செய்து பொலிசார் கலைத்தமை, அத்துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்து மேலும் பலர் காயமடைந்த சம்பவத்தில், துப்பாக்கிச் சூடு நடாத்த உத்தரவிட்டதாக கூறப்படும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே.பி. கீர்த்திரத்ன, துப்பாக்கிச் சூட்டினை நடாத்திய பொலிஸ் குழுவில் அங்கம் வகித்த மூன்று கான்ஸ்டபிள்கள்களின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இன்று இது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்த போது கேகாலை நீதிவான் இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ள நிலையில், அவர்கள் நால்வரையும் எதிர்வரும் 20 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாரு உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொலிஸ் அத்தியட்சர் மொஹான் சிறிவர்தன தலைமையிலான குழுவினர், துப்பாக்கிச் சூட்டை நடாத்த கட்டளையிட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரை , நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் வைத்தும் பிரதான பொலிஸ் பரிசோதகர் கருணாதிலக தலைமையிலான குழுவினரையும் ஏனைய மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM