இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ஹேமந்த தேவப்பிரிய நியமனம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஹேமந்த தேவப்பிரிய 15 வருடங்களாக பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியுள்ளார்.

இவர் கொழும்பு கிரிக்கெட் கழகம், என்.சி.சி, பிங்காரா கிரிக்கெட் அக்கடமி மற்றும் புளும்பீல்ட் கிரிக்கெட் போன்றவற்றுக்கு பயிற்சி வழங்கியுள்ளார்.

விக்கட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரரான இவர் 1980 காலப்பகுதியில் 70 முதல்தர போட்டிகளில் கலந்துக்கொண்டு, 1761 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.