ஐக்கிய அரபு இராச்சியத்தின் ஜனாதிபதியும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று வெள்ளிக்கிழமை காலமானதக அந்நாட்டு ஜனாதிபதி விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தின்  ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவரது 73 ஆவது வயதில் உயிரிந்துள்ளார்.

இது குறித்து அந்நாட்டு ஜனாதிபதி விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதியான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் மறைவிற்காக ஐக்கிய அரபு இராச்சியம் , அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு ஜனாதிபதி விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

UAE President Sheikh Khalifa Bin Zayed Al Nahyan dies