(ஆர்.யசி)

மத்தியவங்கி பிணைமுறி விவகாரத்தில்  குற்றச்சாட்டை எப்படியேனும் மூடி மறைத்து அர்ஜுன மகேந்திரன் மற்றும் அவரை சார்ந்துள்ள பிரதான குற்றவாளிகளை காப்பாற்றவே ஐக்கிய  தேசியக் கட்சி  முயற்சித்து வருகின்றது. மஹிந்த ராஜபக்ஷ காலத்திலேயே அச்சம் கொள்ளாத நாம் இவர்களின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை. இன்னும்  72 மணிநேரத்தில் உண்மையான குற்றவாளிகள் தொடர்பிலான அறிக்கையை பாராளுமன்றத்தில் நாம் வெளிப்படுத்துவோம் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். 

கோப் அறிக்கைக்கு மாறாக ஐக்கிய தேசியக் கட்சியின் அறிக்கை முன்வைக்கப்பட்டாலும் என்ன நடந்தாலும் நாம் உண்மைகளை வெளிப்படுத்தியே தீருவோம். 

உண்மையான  கள்ளர்கள் யார், கள்ளர்களை காப்பாற்றுவது யார் என்ற உண்மைகளை  மக்களுக்கு அறிய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பிலேயே   பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.