புதிய பிரதமர் ரணிலிடம் இ.தொ.க எதிர்பார்க்கும் இருவிடயங்கள்

Published By: Digital Desk 3

13 May, 2022 | 12:06 PM
image

(ஆர்.ராம்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பும் மக்களின் உணர்வுபூர்மான கோரிக்கை மற்றும் பொருளாதார மீட்சி குறித்து புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடத்தில் உள்ள திட்டங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்துக்கட்சிகளின் ஒத்துழைப்பை கோரியுள்ள நிலையில் இ.தொ.க.வின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்ட அதன் தலைவர் செந்தில் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு மக்கள் உணர்வுபூர்வமாக கோரிவந்த நிலையிலும், பொருளாதார நெருக்கடிகள் அதிகரித்ததன் காரணமாகவுமே நாம் அரசாங்கத்திலிருந்து வெளியேறியிருந்தோம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தற்போதைய நிலையில், புதிதாக பிரதமர் பதவியை ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார். அவருக்கு சம்பிரதாய ரீதியாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளோம். 

நாம் அரசாங்கத்திலிருந்து விலகியமைக்கான காரணங்கள் தொடர்பில் அவருடைய அடுத்த கட்டச் செயற்பாடுகள் தொடர்பில் கரிசனைகளைக் கொண்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.

குறித்த விடயங்கள் தொடர்பில் பிரதமரின் அறிவிப்புக்கள் வெளியான பின்னரே இ.தொ.க கூடி ஆராய்ந்து உரிய தீர்மானத்தினை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்ததோடு என்றுமே மக்களின் கோரிக்கைகளுடன் உறுதியாக நிற்கும் என்றும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பதுளையில் பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து...

2024-07-13 17:26:31
news-image

கெப் வாகனம் - மோட்டார் சைக்கிள்...

2024-07-13 17:29:32
news-image

மட்டக்களப்பில் 12வது நாளாக இன்றும் தொடரும்...

2024-07-13 16:49:59
news-image

மாமியாரை கொடூரமாக தாக்கிய மருமகள் கைது!

2024-07-13 16:00:13
news-image

திடீரென தீ பற்றியெரிந்த முச்சக்கரவண்டி ;...

2024-07-13 16:11:13
news-image

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பயணித்த...

2024-07-13 15:34:34
news-image

கிண்ணியாவில் ஐஸ் போதைப்பொருளுடன் பெண் கைது...

2024-07-13 13:56:12
news-image

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரரின் வீட்டில்...

2024-07-13 13:50:39
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-13 14:02:01
news-image

ஜனாஸாக்கள் தொடர்பாக இராஜாங்க அமைச்சர் பிரமித்த...

2024-07-13 12:23:04
news-image

சகோதரியின் வீட்டில் தேங்காய் உரித்துக்கொண்டிருந்த சகோதரன்...

2024-07-13 12:20:30
news-image

கதிர்காம உற்சவத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு!

2024-07-13 12:18:24