யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் படுகொலைக்கு எதிர்ப்பு வெளியிடும் வகையில் வட மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் அனுட்டிக்கப்பட்டுவருகின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி 55 ஆம் கட்டைப் பகுதி மற்றும் அறிவியல் நகர் பகுதியில்  அதிகளவு பொலிஸார் குவிக்கப்பட்டு இருந்தமையால்   அங்கு பதற்ற நிலை உருவாகி இருந்தது 

கிளிநொச்சி அறிவியல் நகர்  பகுதியிலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் செயற்பாடுகள் வழமைபோன்று இடம்பெற்றுவந்த நிலையில், அந்த தொழிற்சாலை மீது தாக்குதல் நடத்தப் போவதாக  தகவல் ஒன்று பரவியதையடுத்து கிளிநொச்சி அறிவியல் நகர்  பகுதிதியில்  பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, திடீர் என  பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும்  குவிக்கப்பட்டிருந்த காரணத்தால் குறித்த பகுதியில் பதற்ற நிலமை ஏற்பட்டது.

எனினும் கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினர் கர்த்தாளுக்கு ஒத்துழைப்பு தருமாறு ஆடைத் தொழிற்சாலை நிர்வாகத்தினரை கேட்டதற்கு அமைவாக  குறித்த ஆடைத் தொழிற்சாலைகள் பன்னிரண்டு மணியளவில் மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.