இராஜங்க அமைச்சர் ஏ.எம்.பௌசிக்கு வெளிநாடு செல்ல அனுமதியளித்து கொழும்பு பிரதம நீதவான் கிஹான் பிலப்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

இன்றிலிருந்து எதிர்வரும் 30 ஆம் திகதிவரை இந்தியா செல்ல அனுமதி கோரி பௌசி நீதிமன்ற அனுமதியை கோரியிருந்த நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் அனர்த்த முகாமைத்துவ  அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அவருக்கு வழங்கப்பட்ட 1 கோடி 95 இலட்சம் ரூபா வாகனத்தை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் இவருக்கெதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினர் வழக்கு பதிவுசெய்துள்ளனர்.

இதேவேளை இவருக்கெதிரான வழக்கு விசாரணையை எதிர்வரும் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவிருந்த நிலையில், குறித்த விசாரணையை எதிர்வரும் ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.