புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம் என அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார்.

No description available.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று புதிய பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில்,  அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“ புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்க்கின்றோம். அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை உடனடியாக ஸ்தாபிப்பதே இந்த நெருக்கடியைக் கையாள்வதற்கான முதற்படியாகும்” என அமெரிக்கத்தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.