புதிய பிரதமராக இன்று பதவியேற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.

இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ டுவிட்டரில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

“ இக்கட்டான சூழலில் வெற்றிகரமாக பயணிக்க வாழ்த்துக்கள்” என புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.