ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது - சம்பிக்க

By T Yuwaraj

13 May, 2022 | 07:11 AM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்ற ராஜபக்ஷக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது.

மாறாக நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க கூடிய குறுகிய மற்றும் மத்திய கால தீர்வுகளை கொண்ட சர்வகட்சி அரசாகவே அது அமைய வேண்டும் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க, அவ்வாறான அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது பதவியை துறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Articles Tagged Under: சம்பிக ரணவக்க | Virakesari.lk

உத்தேச இடைக்கால அரசாங்கம் செயற்பட வேண்டிய முறைமை தொடர்பில் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே சம்பிக ரணவக்க இதனைத் தெரிவித்துள்ளார். 

குறித்த பரிந்துரைகளில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது :

புதிய அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிக்கும் போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களது வேண்டுகோள்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

அவ்வாறே நாடு முகம் கொடுத்துள்ள பாரதூரமான நிலையில் இருந்து விடுபடுவதற்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாடு முகம் கொடுத்துள்ள பாரதூமான சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

சர்வகட்சி அரசாங்கம் ராஜபக்ஷகளைக் காப்பாற்றி அவர்களுக்கு மன்னிப்பு வழங்க தமது நேரத்தை ஒதுக்குவது என்பது காலத்தின் தேவை அல்ல.

மாறாக முக்கிய விடயங்களில் கவனம் செலுத்தி தீர்க்கமான முடிவொன்றை எட்ட வேண்டும். நாம் எதிர்கொண்டுள்ள பொருளாதார , அரசியல் பிரச்சினையில் இருந்து விடுபட முதலில் அரசியல் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த வேண்டும்.

இதுவரை காலம் கொள்ளையடித்து நாட்டை அழிவுக்கு உள்ளாக்கி வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச் சென்று ராஜபக்சாக்களை பாதுகாக்கும் அரசாங்கமாக இடைக்கால அரசாங்கம் அமைந்து விடக்கூடாது.

மாறாக நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாக்க கூடிய குறுகிய மற்றும் மத்திய கால தீர்வுகளை கொண்ட சர்வகட்சி அரசாக அமைய வேண்டும்.

அவ்வாறான அரசு ஒன்றை நிறுவுவதற்கு இடமளிக்கும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை துறக்க வேண்டும்.

அத்தோடு அவர் விலகும் திகதி காலம் என்பன தெளிவாக அறிவிக்கப்பட வேண்டும். மேலும் உத்தேச இடைக்கால அரசாங்கம் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை உடனடியாக நீக்க வேண்டும்.

ஜனாதிபதியுடைய அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதோடு , சுயாதீன ஆணைக்குழுக்கள் போன்ற ஜனநாயக அரசியல் அமைப்பு முறையினை நிறைவேற்ற வேண்டும்.

அரசியல் கட்சிகள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தப்பட்டு அவற்றுக்கு கிடைக்கும் பொருளாதார உதவிகள் , ஊடக பிரச்சார நேரம் போன்றன தொடர்பாக தெளிவாக முன்னெடுக்கப்பட கூடியவகையில் மீண்டும் தேர்தல்கள் தொடர்பான சட்ட திட்டங்கள் ஒழுங்குபடுத்தப்பட வேண்டும்.

மேலும் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் காணப்படுவது போல் ஊழல் ஒழிப்பு நிர்வாகம் ஒன்றை நிறுவ வேண்டும். இடைக்கால அரசு மக்களுக்கு விருப்பமான அரசாங்கம் ஒன்றை தெரிவு செய்து கொள்ளக்கூடிய வகையில் சுயாதீனமாக செயற்பட்டு தேர்தல்களை நடத்தக்கூடிய சுதந்திரமான ஒரு சூழலை உருவாக்க வேண்டும். அத்தோடு தேர்தல் ஆணைக்குழுவிற்கு சுதந்திரமாக செயற்படுவதற்கு பூரண அவகாசம் வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உள்ளூராட்சிமன்ற சபைகளை கலைக்கும் அதிகாரம் எமக்கு...

2023-02-01 18:47:56
news-image

13 ஐ அமுல்படுத்தினால் தமிழ் -...

2023-02-01 18:44:58
news-image

சிங்கள- தமிழ் இனக்கலவரம் மீண்டும் தோற்றம்...

2023-02-01 18:45:41
news-image

இலங்கை வழமைக்கு திரும்ப அமெரிக்கா தொடர்ந்தும்...

2023-02-01 18:43:08
news-image

மக்களை வஞ்சிக்காத சபையை நாம் அமைப்போம்...

2023-02-01 18:42:09
news-image

யானையின் வாலைப் பிடித்து சொர்க்கம் செல்ல...

2023-02-01 18:41:11
news-image

பயங்கரவாத தடைச்சட்டத்தை சீர்திருத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்து...

2023-02-01 17:33:03
news-image

இலங்கை ஜனநாயகம் நல்லிணக்கத்தை வலுப்படுத்துவதற்கான தருணம்...

2023-02-01 17:03:46
news-image

ஊடகவியலாளர் நிபோஜனின் உடலம் இறுதி அஞ்சலியுடன்...

2023-02-01 18:38:05
news-image

சமூக அமைதியின்மை நிலவிய காலங்களில் அரசாங்கம்...

2023-02-01 16:44:53
news-image

எல்பிட்டிய பிரதேச வீடு ஒன்றிலிருந்து இரு...

2023-02-01 16:39:04
news-image

வைத்தியசாலையில் சிகிச்சைபெறும் மனைவியை பார்க்க  தாயுடன்...

2023-02-01 16:14:37