(ரொபட் அன்டனி)

நாட்டு மக்கள் உயர்ந்தபட்ச  சேவை பெற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான  யோசனைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் கவனம் செலுத்துவது அவசியம் என்று  நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.  

எதிர்வரும் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனைகளைத் தயாரிக்கவென அரச, அரச கூட்டுத்தாபனங்கள், நியதிச் சபைகள் மற்றும் தனியார்த் துறை தொழிற்சங்கங்களின் கருத்துக்களை ஏற்றுக் கொள்ளும் நிகழ்வு நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கன் தலைமையில் நேற்று நிதியமைச்சில்  நடைபெற்றது. 

இதன்போதே நிதி அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.