வடகொரியாவில் ஒரே ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 51 கோடியே 90 இலட்சத்து 3 ஆயிரத்து 755 ஆக அதிகரித்துள்ளது.
இவற்றில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளும் தப்பவில்லை. எனினும், ஒரு சில நாடுகளில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு ஏற்படுத்தவில்லை. வடகொரியாவில் கொரோனா தொற்று ஏற்படவேயில்லை என அரசு தொடர்ந்து கூறி வந்தது.
இந்நிலையில், அந்நாட்டில் முதன்முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அந்த நபர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதனை தொடர்ந்து கொரோனாவை ஒழிப்போம் என உறுதி பூண்டுள்ள வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் அன் தேசிய அளவில் அவசரகால நிலையை பிறப்பித்து உள்ளார்.
இதேபோன்று நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது என அவர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வடகொரியாவில் தொற்று இல்லை என இதுவரை தகவல் வெளிவந்த நிலையில், ஒருவருக்கு பாதிப்பு உறுதியான சூழலில் நாடு முழுவதும் ஜனாதிபதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து இருப்பது உலக நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM