(நா.தனுஜா)
அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைத்தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் ஐரோப்பிய ஒன்றியம், அனைத்துப் பிரஜைகளினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீள வலியுறுத்தியிருக்கின்றது.
இதகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
ஐரோப்பிய ஒன்றியமும் அதன் 27 உறுப்புநாடுகளும் இலங்கையின் தற்போதைய நிலைவரங்களை உன்னிப்பாக அவதானித்து வருகின்றன.
இலங்கையர்கள் தமக்குரிய கருத்துச்சுதந்திரத்தை பயன்படுத்தி கடந்த ஒருமாதகாலமாக அமைதியான முறையில் போராட்டங்களை முன்னெடுத்துவந்த நிலையில், தற்போது வன்முறைகள் தூண்டப்படுவதற்குக் காரணமாக அமைந்திருக்கின்ற கொழும்பு ஆர்ப்பாட்டக்காரர்களமீது நடாத்தப்பட்ட மிகமோசமான தாக்குதல்களைக் கடுமையாகக் கண்டிக்கின்றோம்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உள்ளடங்கலாக இதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் மற்றும் பெருமளவானோர் காயமடைந்தமை குறித்து நாம் மிகுந்த கவலையடைகின்றோம்.
இச்சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்குமாறும், இதனுடன் தொடர்புடையவர்களைப் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துமாறும் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். அதேவேளை வன்முறைச்செயல்களிலிருந்து விலகியிருக்குமாறும் நிதானத்துடன் செயற்படுமாறும் அனைத்துத்தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்.
அனைத்துப் பிரஜைகளினதும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை மீளநினைவுறுத்துவதுடன் தற்போது இலங்கையர்கள் முகங்கொடுத்திருக்கும் பல்வேறு சவால்களுக்கும் உரியவாறான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதில் அவதானம் செலுத்துவதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டுகின்றோம்.
கொரோனா வைரஸ் பரவல் நெருக்கடியைக் கையாள்தல் உள்ளடங்கலாக கடந்த சில மாதங்களாக நாம் இலங்கைக்குப் பல்வேறு உதவிகளை வழங்கியிருந்தோம். அதன் தொடர்ச்சியாக இப்போது பொருளாதார நெருக்கடியினால் பின்தங்கிய மக்களுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்களைக் குறைப்பது தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM