முப்படைகளினுடைய தளபதி ஜனாதிபதியே ! நாம் எதற்காக ஆட்சியை பிடிக்க வேண்டும் ? - இராணுவ தளபதி 

Published By: Digital Desk 4

11 May, 2022 | 09:38 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

 நாட்டின் ஜனாதிபதி, முப்படைகளின் தளபதியாகவும் இருக்கும் சூழலில், எதற்காக இராணுவம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என இராணுவ தளபதியும் முப்படைகளின் தலைமை அதிகாரியுமான  ஜெனரால் சவேந்திர சில்வா கேள்வி எழுப்பினார்.

பாகிஸ்தானில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இராணுவ தளபதி ஜெனரால் சவேந்திர சில்வா  விடுத்துள்ள அறிவிப்பு | Virakesari.lk

 இன்று (11) இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழு முன்னிலையில் விசாரணைகளுக்கு ஆஜரான பின்னர் வெளியேறும் போது, ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

 தற்போதைய சூழலில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றப் போவதாக ஒரு தகவல் உள்ளது. உண்மையில் இராணுவ தளபதி எனும் ரீதியில் இது தொடர்பில் நீங்கள் என்ன பதிலளிக்க விரும்புகின்றீர்கள்? அந்த தகவல் உண்மையானது தானா? என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

 அதற்கு பதிலளித்த ஜெனரால் சவேந்ர சில்வா,

 நாட்டில்  அரசியலமைப்பொன்று உள்ளது.  அந்த அரசியலமைப்புக்கு அமையவே இராணுவம் செயற்படும்.  அரசியலமைப்புக்குமைய நாட்டை பாதுகாப்பதே  செயற்பாடாகும். தற்போதைய சூழலில் நாம் அதனையே செய்கின்றோம்.  நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இருக்கும் போது இது எப்படி சாத்தியமாகும்.

 தற்போதைய ஜனாதிபதியே நாட்டினுடைய ஜனாதிபதி.  அரசியலமைப்புக்கு அமைய அவருக்கு அப்பதவியில் இருக்க தற்போதும்  அவகாசம் இருக்கிறது.  அவ்வாறு இருக்கையில் இரணுவத்துக்கு ஆட்சியை கைப்பற்ற எந்த தேவையும் இல்லை. அத்தோடு  ஜனாதிபதியே முப்படைகளினுடைய தளபதியாவார்.  ஜனாதிபதியைப் போன்றே அவர் முப்படைகளின் தளபதி. அப்படி இருக்கையில் நாம் எதற்கு மீள ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும்  என தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈ.பி.எப்., ஈ.ரீ.எப். இணைப்புக்கு எதிர்ப்பு; தொழிற்சங்கங்கள்...

2026-07-17 14:34:16
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை மரணங்கள் : வழக்கு...

2026-07-17 16:18:43
news-image

புகைப்பிடிப்பதால் தினமும் 50 உயிரிழப்புகள்; ஆண்டுக்கு...

2026-07-17 16:19:13
news-image

எரிபொருள் விலையில் பாரியதொரு மாற்றம் ஏற்படாது...

2026-07-17 16:19:41
news-image

போதைப்பொருளுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் இயற்றப்படும்...

2026-07-17 16:20:09
news-image

மண்ணெண்ணெயில் இயங்கிய 100 பஸ்கள் அடையாளம்;...

2026-07-17 22:26:04
news-image

அதிசிறப்புத் தரத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான பதவியுயர்வு...

2026-07-17 22:20:42
news-image

ஜனாதிபதி மற்றும் சிறைச்சாலைத் திணைக்கள அதிகாரிகளுக்கு...

2026-07-17 22:08:58
news-image

தொழிற்கல்வியை வலுப்படுத்த 2027 வரவுசெலவுத் திட்டத்தில்...

2026-07-17 22:06:56
news-image

நேர்மையாக இருந்தால் நிச்சயம் விமர்சனங்கள் வரும்...

2026-07-17 21:48:04
news-image

சிறுபான்மைக் கட்சிகளின் புதிய கூட்டணி எமக்குத்...

2026-07-17 14:35:02
news-image

ஊழியர்களின் பணத்தை கொள்ளையடிப்பதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது...

2026-07-17 16:33:07