சில அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் - அத்துரலியே ரத்ன தேரர்

By T Yuwaraj

11 May, 2022 | 08:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவறான முறையில் வழிநடத்தி நாட்டை சகல துறைகளிலும் நெருக்கடிக்குள்ளாக்கிய ஒரு சில அமைச்சர்களின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டகார்கள் தீ வைத்துள்ளதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன். பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம உட்பட பொதுஜன பெரமுனவின் ஒருசில சிறந்த அமைச்சர்களின் வீடுகளுக்கு தாக்குதல் நடத்தியுள்ளமை கடுமையாக கண்டித்தக்கது. 

அத்துரலியே ரத்ன தேரர் தலைமையில் முக்கியமான சந்திப்பு.! | Virakesari.lk

இளைஞர்களின் அமைதி வழி போராட்டம் தவறான திசை நோக்கி செல்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் தெரிவித்தார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வாரங்களுக்கு முன்னர் பதவி விலகும் தீர்மானத்தை எடுத்து விட்டார்.இருப்பினும் அவரது பதவியையும்,அவர் நாட்டுக்கு ஆற்றிய சேவையையும் முன்னிலைப்படுத்தி மக்களால் வெறுக்கப்பட்ட ஒரு சில தரப்பினர் அவர் பதவி விலக இடமளிக்கவில்லை.

காலிமுகத்திடல் அமைதி வழி போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக பல்லாயிரக்கணக்கானோர் கடந்த திங்கட்கிழமை அலரி மாளிகைக்கு அழைத்து வர பட்டுள்ளார்கள்.அலரிமாளிகையில் போராட்டகாரர்களின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளும் அளவிற்கு வன்மம் தூண்டி விடப்பட்டுள்ளது.

அமைதி வழி போராட்டகாரர்கள் மீது பொதுஜன பெரமுனவின் குண்டர்கள் மிலேச்சத்தனமான தாக்குதலை மேற்கொண்டு வன்முறையை ஆரம்பித்து வைத்துள்ளார்கள்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டுக்கு ஆற்றிய சேவைகள் அனைத்தும் இல்லாதொழிக்க பட்டுள்ளது.மிலேச்சத்தனமான தாக்குதல் மற்றும் அதனை தொடர்ந்து நாட்டில் நிலவும் அமைதியற்ற தன்மைக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும்.

காலி முகத்திடல் அமைதி வழி போராட்டகார்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலின் பின்னணியில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன,குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பிரணாந்து,மிஸ்டர் டென் பெர்ஷன் என அழைக்கப்படும் நபருக்கு தற்போது பிரபல்யமான புதிய பெயர் வைக்கப்பட்டுள்ளது இவர்கள் பொறுப்புக்கூற வேண்டும்.

மக்களாணைக்கு முரணாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு நீதிமன்ற கட்டமைப்பு ஊடாகவே தண்டனை வழங்க வேண்டும்.அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு தீ வைப்பதால் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அனைவரும் காலி முகத்திடல் விவகாரத்துடன் தொடர்பு பெறவில்லை.மக்களால் வெறுக்கப்பட்ட நிலையில் இருந்தவர்கள் தான் கீழ்த்தரமான முறையில் இவ்வாறான செயற்பாடுகள ஈடுபட்டுள்ளார்கள்.முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தவறான வழியில் வழிநடத்தி நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கிய ஒருசில அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு ஆர்ப்பாட்டகாரர்கள் தீ வைத்துள்ளமை மகிழ்வுக்குரியது.

 பொதுஜன பெரமுனவின் பெரும்பாலான முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தின் தவறான தீர்மானத்தை ஆரம்பத்திலிருந்து கடுமையாக எதிர்த்தார்கள் அவர்களின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம 2019ஆம் ஆண்டு காலத்திலிருந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவிக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை கடுமையாக கண்டித்தக்கது.காலி முகத்திடல் அமைதி போராட்டத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருசிலரது ஜனநாயக போராட்டம் தவறான திசைநோக்கி செல்கின்றமை ஆபத்தானது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right