நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அமைதியின்மையின் போது வன்முறையைத் தூண்டியது தொடர்பாக இதுவரையில் 59 சமூக ஊடகக் குழுக்கள் மற்றும் அவற்றின் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
வீடுகள், வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்கள் மீது தாக்குதல்களை நடத்துவதற்காக பல்வேறு சமூக ஊடக தளங்களில் இயங்கும் குழுக்கள் மூலம் மக்கள் குழுக்களை திரட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடக குழுக்கள் மற்றும் நிர்வாகிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறியுள்ள பொலிஸார், இது தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது சமூக ஊடகங்கள் ஊடாக வன்முறையை தூண்டியதாக கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM