கலவரங்கள் மற்றும் வன்முறைகளில் ஈடுபடுவோரை கட்டுப்படுத்துவதற்கும் , குற்றக் குழுக்கள் முன்னெடுக்கும் சட்ட விரோத செயல்களைக் கட்டுப்படுத்தவும் அவசியம் ஏற்படும் போது துப்பாக்கிச் சூடு நடாத்த பொலிஸாருக்கும் , முப்படையினருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கலவரங்களில் ஈடுபடும் குழுக்கள், வன்முறையாளர்கள் உயிர்ச் சேதம் விளைவிக்கும் நோக்கில் அல்லது கொள்ளையிடும் நோக்கில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்யும் நடவடிக்கைகளை நிறுத்தவும், அரச மற்றும் தனியார் சொத்துக்களை சேதப்படுத்துதல், கொள்ளையிடுதல் கொலை செய்தல், கடும் காயம் ஏற்படுத்துதல் போன்ற சம்பவங்களைக் தடுக்கவும் உயர்ந்த பட்ச நடவடிக்கைகளை முன்னெடுக்க பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இன்று ( 11) அறிவித்துள்ளார்.
தேவையான போது துப்பாக்கிப் பிரயோகம் செய்யுமாறும் பொலிஸ் மா அதிபர் இதன்போது அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும், பொலிஸ் பொறுப்பதிகாரிகளுக்கும் அதிகாரமளித்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
இவ்வாறான நிலையில், மேற் கூறப்பட்ட நடவடிக்கைகளுக்காக, துப்பாக்கிச் சூடு நடாத்த பாதுகாப்பு அமைச்சும் முப்படையினருக்கு அதிகாரமளித்து உத்தரவிட்டுள்ளது.
திங்கட்கிழமை ஏற்பட்ட அமைதியின்மையின் போது வீடுகள் மற்றும் வாகனங்கள் மீதான தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை அடையாளம் காண பொதுமக்களின் ஆதரவையும் கோரியுள்ளதாக பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால், கொழும்பில் அமைதியாக இடம்பெற்ற அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பொதுமக்கள் கோபத்தில் பதிலடி கொடுத்ததில் இருந்து பல வன்முறை சம்பவங்கள் மற்றும் பதட்டமான சூழ்நிலைகள் பதிவாகியுள்ளன.
அமைதியின்மை வெடித்ததில் இருந்து, பொதுஜன பெரமுனவின் அரசியல்வாதிகளின் வீடுகள், வாகனங்கள் மற்றும் பல்வேறு சொத்துக்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், மக்களை தாக்கி சொத்துக்களை சூறையாடுவதை தடுக்கும் வகையில் இராணுவத்திற்கு ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சகத்தால் துப்பாக்கி சூடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதனைப் பின்பற்றிய இலங்கை காவல்துறை, நாட்டில் மேலும் வன்முறைகள் நடைபெறாமல் தடுக்க துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM