(லியோ நிரோஷ தர்ஷன்)

பெஷிஸ் வாதத்தின் உச்ச நிலையில் அரசாங்கம் செயற்படுகின்றது. சட்டவிரோதமான வற் வரியை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் இன்று பாராளுமன்றத்தில் சூழ்ச்சி செய்வதாக தெரிவித்துள்ள கூட்டு எதிர்கட்சி, ஆட்சி மாற்றத்திற்கும் வற் வரி தோல்வியில் முடிவடையவும் காளி கோவிலில் தேங்காய் உடைத்து வேண்டுதல் செய்யப்பட்டது.

முகத்துவாரம் காளி கோவிலில் இன்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் கூட்டு எதிர் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான பந்துல குணவர்தன, மஹிந்த யாபா அபேவர்தன மற்றும் சிசிர ஜயகொடி ஆகியோர் கலந்துக் கொண்டிருந்தனர்.