அரசியல் தலைவர்கள் இலங்கை மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டுமென பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேவேளை, போராட்டங்கள் வன்முறையாக மாறி பலரும் உயிரிழந்துள்ள நிலையில், இலங்கை மக்கள் அமைதியான வழியில் தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும் எனவும் பாப்பரசர் தெரிவித்துள்ளார்.
பாப்பரசர் பிரான்ஸிஸ் இலங்கையின் அமைதிக்கு அழைப்பு விடுத்துள்ளதுடன், மக்களின் கோரிக்கைகளுக்கு ஆளும் கட்சி அரசியல் தலைவர்கள் செவிசாய்க்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
மேலும், அவர் மக்களின் அபிலாஷைகளுக்கு செவிசாய்க்கவும், மனித உரிமைகள் மற்றும் சிவில் உரிமைகளுக்கு முழு மரியாதையை உறுதிப்படுத்தவும் பொறுப்புள்ள அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.
வன்முறைக்கு அடிபணியாமல், அமைதியான அணுகுமுறையைப் பேணுமாறு அனைத்துத் தரப்பினரையும் வலியுறுத்துகின்றேன்.
பாப்பரசர் பிரான்சிஸ் இன்று புதன்கிழமை பொது வெளியில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார்.
மேலும், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார சவால்கள், பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை அலரி மாளிகை மற்றும் காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை கொழும்பு பேராயர் கர்தினால் மால்கம் ரஞ்சித் கண்டித்த 24 மணி நேரத்திற்குள் பாப்பரசரின் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM