(நெவில் அன்தனி)

பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெறவுள்ள இருவகை மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களுக்கான 15 வீராங்கனைகளைக் கொண்ட இலங்கை குழாம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

Sri Lanka Women Team To Tour Pakistan In May For White-Ball Series

சமரி அத்தபத்துவை அணித் தலைவியாகக் கொண்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் குழாத்தில் அனுபவம் வாய்ந்த வீராங்கனைகளுடன் சில இளம் வீராங்கனைகளும் இடம்பெறுகின்றனர்.

பாகிஸ்தானுடன் தலா 3 போட்டிகளைக் கொண்ட மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடரிலும் மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் இலங்கை விளையாடும்.

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி எதிர்வரும் 19ஆம் திகதியன்று பாகிஸ்தானுக்கு பயணமாகும்.

Sri Lanka women's cricket tour to Pakistan postponed

மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகளும் மகளிர் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் கராச்சியில் நடைபெறவுள்ளன.

3 போட்டிகளைக் கொண்ட மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் தொடர் மே 24ஆம், 26ஆம், 28ஆம் திகதிகளில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஜூன் 1ஆம், 3ஆம், 5ஆம் திகதிகளில் நடைபெறும்.

Sri Lanka avoids wooden spoon with tense win

பாகிஸ்தானுக்கு எதிரான மகளிர் சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டிகள் பொதுநலவாய விளையாட்டு விழா மகளிர் இருபது 20 போட்டிக்கு முன்னோடியான பரீட்சார்த்த போட்டிகளாக இலங்கைக்கு அமையவுள்ளது.

இலங்கை மகளிர் குழாம்

சமரி அத்தபத்து (தலைவி), ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம, இமேஷா துலானி, ப்ரசாதனி வீரக்கொடி, நிலக்ஷி டி சில்வா, கவிஷா டில்ஹாரி, அமா காஞ்சனா, அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர, உதேஷிகா ப்ரபோதனி, சுகந்திகா குமாரி, சச்சினி நிசன்சலா, ஓஷாதி ரணசிங்க, அனுஷ்கா சஞ்சீவனி.

தயார்நிலை வீராங்கனைகள்

காவியா காவிந்தி, ரஷ்மி டி சில்வா, சத்யா சந்தீப்பனி, மல்ஷா ஷெஹானி, தாரிக்கா செவ்வந்தி.