வரலாற்றுப்பிரசித்திபெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு பல்வேறு கோணங்களிலும் தொண்டாற்றி பணிசெய்து  உதவிய அன்பர்களுக்கு இரண்டாம்கட்ட  பணிநயப்புவிழா ஆலய சபாமண்டபத்தில் நடைபெற்றது.

இப்பணிநயப்பு விழா ஆலய அறங்காவலர்சபைத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையில் அறங்காவலர்சபை ஆலோசகர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜாவின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது.

விழாவிற்கு முதன்மை அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார். 

ஆன்மீகஅதிதியாக ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்.

இரண்டாம்கட்ட பணிநயப்புவிழாவில் சிவாச்சார்யர்கள் ஆலய அறங்காவலர்சபையினர் அதீதநிதியுதவி நல்கியோர் மற்றும் மண்டலாபிசேகபூஜை உபயகாரர்கள் ஆகியோருக்கு மீனாட்சிதுரந்தரர் இறைபணிச்செம்மல் இறைநேசர் என்ற பட்டம் வழங்கி பாராட்டுமடல்கள் வழங்கப்பட்டன.