கொட்டகலை நகரில் திடீரென முளைத்த இராணுவ சோதனை சாவடி ; பொது மக்கள் வர்த்தக சமூகத்தினர் சந்தேகம்

Published By: Digital Desk 3

11 May, 2022 | 03:42 PM
image

(அட்டன் கிளை)

நுவரெலியா  மாவட்டத்தில் எந்த நகரிலும் அமைக்கப்படாத இராணுவ சோதனை சாவடி திடீரென கொட்டகலை நகரத்தில் மாத்திரம் ஏன் அமைக்கப்பட்டது என கொட்டகலை வர்த்தக சங்கத்தலைவரும் மலையக தொழிலாளர்  முன்னணியின் நிதிச்செயலாளருமான விஸ்வநாதன் புஷ்பா கேள்வி எழுப்பியுள்ளார். 

நகர பாதுகாப்பு தொடர்பில் டிம்புல பத்தனை  பொலிஸ் நிலையத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற சந்திப்பின் போது நுவரெலியா மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகரிடம் இது குறித்து அவர் உரையாடுகையில், 

ஏற்கனவே கொட்டகலை  கொமர்ஷல் பகுதியில் ஒரு இராணுவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அது குறித்து நாம் மட்டுமே கேள்வி எழுப்பினோம். இப்போது நாட்டு நிலைமைகள் எமக்குப் புரிகின்றன.   

எமது நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து  நகரங்களும் அமைதியாகவே உள்ளன. கொட்டகலை நகரத்தின் அனைத்து மக்களும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடக்கின்றனர்.  அப்படியிருக்கும் போது எதற்கு எமது நகரத்திற்கு மாத்திரம் இந்த இராணுவ சோதனை சாவடி எதற்கு?

பொலிஸ் சோதனை சாவடிகளே இங்கு இருந்ததில்லை. அப்படி இருந்தாலும் பொலிஸ் அதிகாரிகள் யார் எவர் என்பது எமக்குத் தெரியும். பொலிஸார் மக்களோடு மக்களாக இருப்பவர்கள். 

ஆனால் இராணுவத்தினர் யார் என்பது பற்றி எமக்குத்தெரியாது. ஆகவே இது எமது மக்கள் மத்தியில் பதற்றத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது என்றார். இதற்கு பதிலளித்த பொலிஸ் அத்தியட்சகர் , நாட்டில் அவசரகால நிலைமை அமுல்படுத்தப்பட்டதையடுத்தே இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

அந்த சட்டம் இல்லாவிட்டால் எந்தவொரு இராணுவ வீரரும் வீதியில் செல்லும் எந்த தனிமனிதரையும் கூட கேள்வி கேட்க முடியாது. தடுத்து நிறுத்த முடியாது. அதே போன்று வாகனங்களை சோதனை செய்ய முடியாது. 

ஆனால் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு நாம் கட்டுப்பட்டுள்ளோம். இது குறித்து நீங்கள் பீதியடையத் தேவையில்லை. ஏனென்றால் பாதுகாப்பு கடமைகளில் பொலிஸாரும் ஈடுபட்டிருப்பர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் ஆயரை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் 

2024-06-16 12:14:49
news-image

இசை நிகழ்ச்சியில் நடனமாடிக்கொண்டிருந்த இளைஞர் கூரிய...

2024-06-16 12:07:45
news-image

யாழில் மைதானத்துக்குள் புகுந்து வாள்வெட்டுத் தாக்குதலில்...

2024-06-16 11:52:25
news-image

வாடகை வீட்டில் வசிப்போரிடமிருந்தும் வரி அறவிட...

2024-06-16 12:20:10
news-image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த...

2024-06-16 12:06:06
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய...

2024-06-16 11:26:58
news-image

ரயிலில் பயணித்த உக்ரைன் யுவதி ரயில்...

2024-06-16 11:13:55
news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16