ஆறு வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலைசெய்த இளைஞருக்கு மரண தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த உத்தரவினை கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சரோஜினி குசலா வீரவர்தன இன்று (25) பிறப்பித்துள்ளார்.

23 வயதான இளைஞர் ஒருவருக்கே குறித்த மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு கிருலப்பனை பகுதியில் 6 வயது சிறுமியொருவரை  பாலியல் துஷ்பிரயோகம் செய்து, சிறுமியின் உடலை பாவனையற்ற நீர் வடிகாலொன்றில் வீசிய குற்றச்சாட்டிற்கு குறித்த மரண தண்டணை விதிக்கப்பட்டுள்ளது.