ஊரடங்கை நீக்குவதா ? நீடிப்பதா ? : இராணுவப் பிரசன்னம் குறித்து பாதுகாப்புச் செயலரின் கருத்து

Published By: Digital Desk 4

11 May, 2022 | 01:54 PM
image

நாட்டில் தற்போதைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா ? அல்லது நீடிப்பதா என்பது தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

புதிய பாதுகாப்பு செயலாளராக மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன | தினகரன்

இதேவேளை, நாட்டில் வன்முறைகள் பாரதூரமானால் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்படுமே தவிர , அது ஒருபோதும் இராணுவ ஆட்சியாக மாறாது என்று தெரிவித்தார்.

அத்துடன் மக்களின் பாதுகாப்பிற்காகவே இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத்தளபதி கோரிக்கை விடுத்தார்.

அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ள போதிலும் , பாதுகாப்பு கடமைகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக அரசியலமைப்பிற்கமைய மீண்டும் தான் பாதுகாப்பு செயலாளராக நியமனம் பெற்றுள்ளதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்