இலங்கை மத்திய வங்கி ஆளுநரை சந்தித்தார் அமெரிக்கத் தூதுவர்

By T. Saranya

11 May, 2022 | 01:44 PM
image

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவை சந்தித்து தற்போதைய நெருக்கடி நிலைகுறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடியுள்ளார்.

ஒரு தொழில்முறை மற்றும் சுதந்திரமான இலங்கை மத்திய வங்கியின் செயற்பாடு பொருளாதார மீட்சிக்கு அவசியமானது. 

நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான தற்போதைய முயற்சிகள் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் சிறந்த பாதையில் கொண்டு வருவதற்கான உள்ளூர் மற்றும் பலதரப்பு முயற்சிகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கும் வழிகளை ஆராய்வது குறித்து இந்த கலந்துரையாடலில் பேசப்பட்டுள்ளது.

No description available.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right