காதலை கவிதையாகவும், கற்பனை மிக்க சிற்பமாகவும் டிஜிட்டலில் செதுக்கப்பட்டிருக்கும் புதுமுகங்களின் 'காலங்களில் அவள் வசந்தம் ' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் 'காலங்களில் அவள் வசந்தம்'. 

இதில் கௌஷிக், அஞ்சலி நாயர், ஹிரோஷினி கே. குமார், சௌந்தர்யா, அனிதா சம்பத், ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஹரி இசையமைத்திருக்கிறார். 

தரமான படைப்புகளை சிறிய பட்ஜட்டில் தயாரிப்பதில் முன்னணி வகிக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சி. வி. குமார் தயாரித்திருக்கிறார். 

பார்வையாளர்களையும், ரசிகர்களையும் என்றென்றும் இளமையுடன் வைத்திருக்கும் காதல் கதையை மையப்படுத்திய 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது.

ஃபர்ஸ்ட் லுக்கில் காதலியின் மென்மையான பாதங்களை வருடிக்கொண்டே காதலுடன் நாயகன் நாயகியை பார்க்க.., நாயகனின் அதீத காதலை தாங்க இயலாமல் அதனை புன்னகைத்துக்கொண்டே நாயகி மேல்நோக்கிப் பார்த்து அனுபவித்து ரசிப்பது போலிருக்கும் இந்த புகைப்படத்தை காதலர்கள் தங்களுடைய கணினியின் முன்தோற்ற பதாகையாக வைத்து கொண்டாடுகிறார்கள்.

 விரைவில் இந்தப் படத்தின் சிங்கிள் ட்ராக், டீசர், ஓடியோ ஆகியவை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.