நீர்கொழும்பில் நேற்று இடம்பெற்ற வன்முறையில் பல சொத்துக்களுக்கு சேதம்

By T. Saranya

11 May, 2022 | 11:40 AM
image

நீர்கொழும்பு பகுதியில் நேற்றிரவு நடைபெற்ற வன்முறை சம்பவத்தை அடுத்து பல சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்றிரவு மோதல் ஏற்பட்டிருந்தது.

 

இந்த மோதலினால் ஐந்து வர்த்தக நிலையங்கள், 2 முச்சக்கர வண்டிகள், 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6 சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மையை வழமைக்குக் கொண்டு வருவதற்கு இராணுவம் அழைக்கப்பட்டிருந்தது. 

எவ்வாறாயினும், பாதுகாப்புப் பிரிவின் தலையீட்டில் அமைதியின்மை நேற்றிரவு வழமைக்குக் கொண்டு வரப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்துடன், நீர்கொழும்பிலுள்ள மேலும் பல ஹோட்டல்கள் மற்றும் வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.

பெறுமதிமிக்க வாகனங்கள் பல சேதமாக்கப்பட்டுள்ளதுடன், சிலர் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்றைய தினமும் அமைதியின்மை சம்பவங்கள் பல பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right