(எஸ்.என்.நிபோஜன்)யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையை கண்டித்து வடக்கு, கிழக்கு இணைந்த பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுக்கொண்டுள்ள நிலையில் கிளிநொச்சியில் இன்று கடைகள், பொதுச்சந்தை, பாடசாலைகள், வங்கிகள், அரச தனியார் அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டு பூரண கர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.அத்துடன் அரச தனியார் பேருந்துகள் மற்றும் முச்சக்கர வண்டிகள்   எவையும் இன்று சேவையில் ஈடுபடவில்லை என அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மேலும் கிளிநொச்சி நகரை   அண்டிய  பகுதிகளில்  மக்களின் நடமாட்டம்  இல்லாது  கிளிநொச்சி நகரப்பகுதி வெறிச்சோடிக் கிடப்பதாகவும் கிளிநொச்சி வைத்தியசாலை மாத்திரம் வழமைபோன்று இயங்கிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் இன்றையதினம்  பேருந்துகள் சேவையில் இல்லாததினால் வெளிமாவட்ட பணியாளர்கள் தூர இடங்களில் இருந்து வரும் நோயாளர்களும் வருகை தரவில்லைஎனவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
மொத்தத்தில் கிளிநொச்சி மாவட்டத்தின் அனைத்து செயர்ப்படுகளும் முடங்கி நீதிகோரி  மௌனித்திருப்பதாக  அறிய முடிகிறது.