மீரிகம பிரதேசத்தில் பதற்றம் - மூன்று வர்த்தக நிலையங்கள் சேதம்

By T Yuwaraj

10 May, 2022 | 10:02 PM
image

நீர்கொழும்பு பெரியமுல்லை மீரிகம பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் மூன்று வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கி சேதப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளதுடன் மூன்று துவிச்சக்கர வண்டிகளும் தீக்கிரையாக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 நீர்கொழும்பு நகரில் நேற்று ஹோட்டல் ஒன்று எரியூட்டப்பட்டமை மற்றும் அங்கிருந்து பெறுமதியான பொருட்களை களவாடியமை ஆகியவற்றின் பின்னணியில் மீரிகம பிரதேசத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தரப்பினர் இவ்வாறு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இவ்வாறு வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளுக்கு தீவைத்து வன்முறைகளில் ஈடுபட்டவர்களில் நீர்கொழும்பு பிரதேசத்தை அல்லாத வெளியாட்கள் பங்கேற்றிருந்ததாக கூறப்படுகிறது.

 மீரிகம டிவைன் சந்தியிலேயே இவ்வாறு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதில் மருந்தகம் உள்ளடங்களாக இரண்டு வர்த்தக  நிலையங்களும் தாக்குதலுக்கு இலக்காகியிருக்கின்றன.