“கோட்டா கோ கம”, “மைனா கோ கம” தாக்குதல்கள் :பொலிஸ் நிலையங்களில் 14 முறைப்பாடுகள் பதிவு

Published By: Digital Desk 4

10 May, 2022 | 07:45 PM
image

( எம்.எப்.எம்.பஸீர்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பதவி விலகக்கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுப்பட்டு வந்த எந்த கட்சியையும் சாராத அமைதி போராட்டக்காரர்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் மூர்க்கத்தனமாக நடத்திய தாக்குதல் தொடர்பில் 14 முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.   

...

“மைனா கோ கம” மீதான தாக்குதல் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகளும்,  “கோட்டா கோ கம”

 மீதான தாக்குதல் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகளும், தாக்குதலுக்கு உள்ளானவர்களால் பதிவு  செய்யப்பட்டுள்ளன.

 இந் நிலையில் இன்று ( 10) கோட்டா கோ கமவுக்கு கொழும்பு ,மத்தி  ஸ்தல தடயவியல் பிரிவினர் வருகை தந்து  அழிவுகளை பார்வையிட்டு சாட்சியங்களை சேகரித்தனர்.

 இந் நிலையில் இன்று கோட்டா கோ கமவில் ஊடகவியலாளர்களை சந்தித்த சட்டத்தரணிகள் குழாம் ஒன்று,  இந்த தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் சனத் நிசாந்த,, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனைக் கைது செய்ய வேண்டும் எனவும் பொலிஸ் மா அதிபரும் இந்த பொறுப்பிலிருந்து நழுவ முடியாது எனவும் தெரிவித்தனர்.

 இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தனிப்பட்ட வழக்கு தாக்கல் செய்து குறித்த அரசியல், பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை பெற்றுக்கொள்ளப்படும் என அவர்கள் கூறினர்.

சட்டத்தரணிகளான  சுசந்த தொடவத்த,  சானிகா சில்வா,  சரித் கல்ஹேன, நுவன் போப்பகே உள்ளிட்டவர்கள் இதனை அறிவித்தனர்.

 இதன்போது கருத்து வெளியிட்ட சட்டத்தரணி நுவன் போப்பகே,  சட்ட மா அதிபர் விசாரணைகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை, அமைதி போராட்டத்தின் ஊடாக பெறப்பட்ட வெற்றியே என சுட்டிக்கட்டியதுடன், பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளில் நம்பிக்கை இல்லாததால் சுயாதீன ஆணைக் குழு ஒன்றினை அமைத்து   இது குறித்து விசாரிக்க வேண்டும் என கோரினார்.

இதனிடையே, கொழும்பு நீதிவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் பலர் பொலிஸ் மா அதிபரிடம் நேரடி விசாரணைக்கு முறையிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மேயர் வேட்பாளர்கள் குறித்து அடுத்த வாரம்...

2025-03-20 20:39:53
news-image

புதிய வரி விதிப்பு முறைமையை உருவாக்க...

2025-03-20 15:14:37
news-image

நாணய நிதியத்தின் நிபந்தனைக்கமைய வரி அறவீடு...

2025-03-20 20:17:27
news-image

இராணுவ சேவையில் இருந்து இடை விலகியவர்களுக்கு...

2025-03-20 20:41:27
news-image

கிழக்கு முகாம்களில் நடைபெற்ற சித்திரவதை படுகொலைக்கு...

2025-03-20 15:58:26
news-image

வரவு,செலவுத்திட்டத்தினை மக்கள் விமர்சிப்பதற்கு அதிகாரச் சிறப்புரிமையே...

2025-03-20 20:40:25
news-image

நாணய நிதியத்துடனான செயற்றிட்டங்களை அரசாங்கம் பாராளுமன்றுக்கு...

2025-03-20 15:52:26
news-image

அர்ச்சுனா எம்.பி. குறித்த சபாநாயகரின் தீர்மானம்...

2025-03-20 19:57:09
news-image

பதவி விலகினார் பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...

2025-03-20 20:27:34
news-image

வாழைச்சேனை கடதாசி ஆலையை நவீன மயப்படுத்த...

2025-03-20 15:57:43
news-image

யுத்தம் இல்லாத நிலையில் படைகளுக்கான நிதி...

2025-03-20 16:01:42
news-image

செட்டிக்குளத்தில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் இளைஞன் கைது...

2025-03-20 19:54:38