பொது சொத்துக்கள் அல்லது தனிப்பட்ட சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ள முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த செய்தி வெளியானதன் பின்னர் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்தன விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டார்.
அதில் அவர் தெரிவித்துள்ளதாவது :
நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற துரதிஷ்டவசமான செயற்பாடுகளால் நபர்கள் மீதான தாக்குதல்கள், சொத்துக்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. ஒவ்வொருவரும் எந்த அரசியல் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தாலும் அவர்கள் அனைவரும் இலங்கை பிரஜைகளாவர். எனவே எவருக்கும் அசௌகரியத்தை ஏற்படுத்தாமல் ஜனநாயக ரீதியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தை கையிலெடுத்து , பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றமை உள்ளிட்ட செயற்பாடுகளால் நாட்டிற்கு எதிர்காலம் என்ற ஒன்று இருக்காது. இதுவரையில் (இன்று மாலை வரை) வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களுக்கு தீ வைக்கப்பட்ட 104 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அதே போன்று 60 வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளதோடு , 40 வாகனங்கள் சேதமடையச் செய்யப்பட்டுள்ளன. 219 பேர் காயமடைந்துள்ளனர். இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமைதியான முறையில் இளைஞர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டங்களை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரு சில தரப்பினர் கொள்ளையடித்தல் , வீடுகளுக்கு தீ மூட்டுதல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். நாட்டில் சட்டத்தையும் அமைதியையும் நிலைநாட்டுவதற்கு மதத் தலைவர்கள் உதவ வேண்டும். இவற்றை மீறி வன்முறைகள் தொடருமாயின் விருப்பமின்றியேனும் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியேற்படும் என்றார்.
கருத்து
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM