தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் - அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

By T. Saranya

10 May, 2022 | 10:26 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அதனை உறுதிப்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திங்களன்று அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையால் ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் சொத்து சேதங்களுக்கும் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியே பொறுப்பு கூற வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு இந்த தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ள சகல அரசியல்வாதிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதோடு , வைத்தியசாலைகளில் நோயாளர்கள் மற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட சகல தரப்பினரதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

கொழும்பிலுள்ள அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அதன் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

நாட்டில் தோற்றம் பெற்ற பொருளாதார நெருக்கடிகள் தற்போது அரசியல் நெருக்கடிகளாக மாற்றமடைந்துள்ளன. அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால் பலர் காயமடைந்துள்ளதோடு , உயிரிழப்புக்களும் பதிவாகியுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எம்மால் திங்களன்று ஆரம்பிக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பினை நாளை (இன்று) காலை 8 மணி வரை நீடிக்க தீர்மானித்துள்ளோம்.

இந்த வன்முறை சம்பவங்களுடன் அரசியல்வாதிகளும் , பிரதேச அரசியல்வாதிகளும் தொடர்புபட்டுள்ளனர். இவ்வாறானவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தற்போது வைத்தியசாலைகளும் ஆபத்தான தளங்களாகியுள்ளன. எனவே வைத்தியசாலைகளிலுள்ள நோயாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எதிர்வரும் நாட்களில் மதியம் 12 மணி வரை ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடத்தீர்மானித்துள்ளோம். அமைதியான ஆர்ப்பாட்டங்களின் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டமையால் தேசிய பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி பொறுப்பு கூற வேண்டும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகையிரத திணைக்கள காணிகளை சட்டவிரோதமாக உபயோகிப்போருக்கு...

2022-10-05 16:44:13
news-image

பல்கலைக்கழகங்களில் வன்முறைக்கு இடமளிக்க முடியாது -...

2022-10-05 16:45:38
news-image

ஆதாரங்களை சேகரிக்கும்பொறிமுறையை- சர்வதேச விசாரணை பொறிமுறையாக...

2022-10-05 16:52:42
news-image

பேருவளை- தர்காநகர் பகுதிகளில் நுகர்வுக்குப் பொருத்தமில்லாத...

2022-10-05 16:35:06
news-image

காத்தான்குடியில் 15 வயது சிறுமியை பாலியல்...

2022-10-05 16:19:31
news-image

கொழும்பு - கிராண்ட்பாஸ் துப்பாக்கிச்சூட்டு :...

2022-10-05 16:15:06
news-image

தொலைபேசிக் கட்டணம் இன்று முதல் அதிகரிக்கும்

2022-10-05 16:38:33
news-image

நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்காெள்ளுமாறு சபாநாகருக்கு அறிவுரை...

2022-10-05 14:40:02
news-image

5 மணிநேர நடவடிக்கையின் பின் பாதுகாப்பாக...

2022-10-05 16:36:12
news-image

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு எதிராக முல்லைத்தீவில்...

2022-10-05 13:25:41
news-image

சர்வதேச அழுத்தம் மூலம் தமிழர்களுக்கு தேவையானவற்றை...

2022-10-05 15:54:54
news-image

பாரிய மனித உரிமை மீறல்கள் குறித்த...

2022-10-05 13:10:41