(இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எனவும் , முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அவரது சகாக்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தி தேசிய தொழிற்சங்க ஐக்கிய ஒன்றியத்தினர் இன்று கொழும்பு - கோட்டை புகையிரத நிலைய வளாகத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இவர்கள் பின்னர் பேரணியாக சென்று காலி முகத்திடல் 'கோட்டா கோ கம' போராட்டத்திலும் கலந்து கொண்டனர்.
'கொலைகார மற்றும் பொது மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள அரசாங்கத்தை விரட்டியடிப்போம், போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வோம்' என வலியுறுத்தி தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
காலி முகத்திடலில் அமைதி வழி போராட்டத்தில் பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நேற்று மேற்கொண்ட மிலேச்சத்தனமான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1,000 தொழிற்சங்கத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகிறார்கள்.
இலங்கை ஆசிரியர் சங்கம்
அரசாங்கத்தின் செயற்பாட்டுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து நாடுதழுவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளோம்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிட போவதில்லை.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பதவி விலகலை மாத்திரம் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
ஊழல் ஒழிப்பு தேசிய இயக்கம்
நாட்டு மக்கள் மீது அதிகாரத்தை வரம்பு மீறி பிரயோகிக்க ஜனாதிபதி உட்பட முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வகுத்த திட்டம் தற்போது அவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளது. ஜனாதிபதி முறையாக பதவி விலக வேண்டும் தேசிய ஊழல் ஒழிப்பு அமைப்பின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
முன்னிலை சோசலிஷ கட்சி
அரசியலமைப்பிற்கு அமைய எவ்வாறு பதவி விலகுவது என ஜனாதிபதி கடந்த நாட்களில் குறிப்பிட்டிருந்தார். தனது சகோதரர் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலமைப்பிற்கமைய பதவி விலகியுள்ளார்.
ஆகவே அதற்கமைய பதவி விலக வேண்டும் என முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் துமிந்த நாகமுவ தெரிவித்தார்.
தேசிய தாதியர் சேவை சங்கம்
நாட்டின் அமைதியற்ற தன்மைக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொறுப்புக்கூற வேண்டும். காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீதான தாக்குதல் சம்பவத்திற்கு அவரே பிரதான திட்டமிடலாளர்.
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜக்ஷ,ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ கைது செய்யப்பட வேண்டும்.பொலிஸ்மா அதிபர் பதவி விலக வேண்டும் என தேசிய தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்நாயக்க தெரிவித்தார்.
துறைமுக ஒன்றிணைந்த சங்கம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவியில் இருக்கும் வரை நாட்டில் அமைதியற்ற தன்மையே நிலவதால் பொருளாதார நெருக்கடி மென்மேலும் தீவிரமடையும்.
ஆகவே பொருளாதார நெருக்கடியினை தீவிரப்படுத்தாமல் ஜனாதிபதி கௌரவமான முறையில் பதவி விலக வேண்டும்.
இல்லாவிடின் தனது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஏற்பட்ட கதியே ஏற்படும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என துறைமுக ஒன்றிணைந்த சங்கத்தின் தலைவர் நிரோஷன் கொரகாஹேன்ன தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும்,காலி முகத்திடல் போராட்டகாரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்கதலுக்கு நீதி கிடைக்கப்பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தபால்,சுகாதாரம்,மின்சாரம்,பெற்றோலியம்,சுங்கம்,விமான சேவை உள்ளிட்ட பலதரப்பட்ட துறைகளின் தொழிற்சங்கத்தினர்; நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM