முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரர்கள் மாயம் !

Published By: Digital Desk 4

10 May, 2022 | 04:20 PM
image

முல்லைத்தீவு செம்மலை கடலில் நீராட சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்கள் கடல் அலையில் இழுத்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

அளம்பில் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் குழு ஒன்று செம்மலை கடலில் நீராடுவதற்காக சென்ற  நிலையில் கடல் வழமைக்கு மாறாக கொந்தளிப்பாக காணப்பட்டது. அதனையும் பொருட்படுத்தாது  கடல் நீச்சலில் ஈடுபட்டுள்ளனர் .

இந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சகோதரர்களில் ஒருவர் அலையில் இழுத்து செல்லப்பட்ட  நிலையில் அவரை காப்பாற்றும் நோக்கோடு ஏனைய இரு சகோதர்களும் முயற்சியில் ஈடுபட்டுள்ளபோது அவர்களும் அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

யாழ். வீதி அலம்பிலை சேர்ந்த பத்மநாதன் விஸ்வநாதன் (29) பத்மநாதன் விஜித் (26) பத்மநாதன் விழித்திரன் (22) ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்களே அலையில் அடித்து செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து பெருமளவான மக்கள் செம்மலை கடற்கரை பகுதியில் குவிந்துள்ளதோடு பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

தாழமுக்கம் காரணமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதால் தேடுதல் முயற்சிகள் எவையும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை .

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹீத்ரோ விமானநிலையம் மூடப்பட்டது ; ஸ்ரீலங்கன்...

2025-03-21 15:26:30
news-image

15 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்...

2025-03-21 15:24:44
news-image

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய 10...

2025-03-21 14:42:49
news-image

ஜேர்மனிய பெண்ணின் வேட்பு மனு நிராகரிப்பு 

2025-03-21 15:05:25
news-image

இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதை...

2025-03-21 14:03:11
news-image

ஹிம்புல்கொட காணி மோசடியுடன் சிரந்தி ராஜபக்ஷவுக்கு...

2025-03-21 15:41:16
news-image

சிரேஷ்ட பிரஜைகளின் 10 இலட்சத்துக்கும் குறைவான...

2025-03-21 15:07:09
news-image

மது அருந்திய போது நண்பரின் கை...

2025-03-21 13:23:49
news-image

மனித விற்பனை, துஷ்பிரயோகத்தை தடுக்க சிறுவர்கள்...

2025-03-21 13:05:35
news-image

அமைதியான இந்து சமுத்திர வலயத்திற்காக இலங்கை...

2025-03-21 13:19:00
news-image

யாழில் வேட்பு மனுத் தாக்கலின் போது...

2025-03-21 13:02:16
news-image

சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர் கைது!

2025-03-21 15:02:33