கொழும்பில் நேற்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களால், அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பில் சி.ஐ.டி விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளது.
இதற்கிடையில், பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் உள்ள போராட்ட தளத்தை முற்றுகையிட்டபோது பொலிஸாரின் செயலற்ற தன்மை குறித்து பல காணொளி காட்சிகள் வெளிவந்துள்ளன.
அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுடன் காலி முகத்திடலில் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM