ஞானக்காவின் கோவில், ஹோட்டல், வீடு தீ வைத்து எரிப்பு

Published By: Digital Desk 3

10 May, 2022 | 01:56 PM
image

பொதுஜன பெரமுனவின் ஆதரவாளரும் அவர்களின் ஆஸ்தான சோதிடருமான அநுராதபுரத்திலுள்ள ஞானக்காவின் வீடு, கோவில், ஹோட்டல் என்பன மக்களால் முற்றுகையிடப்பட்டு தீயிட்டு அழிக்கப்பட்டுள்ளன.

May be an image of 2 people, people standing, fire and outdoors

முன்னதாக அனுராதபுரம், இசுருபுர பிரதேசத்தில் உள்ள ஞானக்கா என்ற பெண்ணின் வீட்டின் முன் எதிர்ப்பாளர்கள் நெருங்கும் அபாயம் காரணமாக கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் குவிக்கப்பட்டிருந்தனர்.

No description available.

எனினும், இன்று (10) அதிகாலை ஒரு மணியளவில் ஞானக்காவின் வீடு தாக்குதலுக்குள்ளானது. 

அங்கு படையினர் முதலில் வீட்டைப் பாதுகாக்க முயன்றனர். ஆனால் பின்னர் ஞானக்காவின் வீட்டைச் சுற்றியுள்ள சுவர் உடைக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் உள்நுழைந்தனர்.

May be an image of fire and outdoors

பின்னர் போராட்டக்காரர்கள் ஞானக்காவின் உடைமைகளில் சிலவற்றை கிராம மக்களுக்கு விநியோகித்ததுடன் வீட்டிற்கு தீ வைத்து எரித்தனர்.

அதன்பின்னர் ஞானக்காவின் கோவில் தாக்கப்பட்டது. மேலும் நவநுவர வீதியிலுள்ள ஞானக்காவின் ஹோட்டலை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அங்கிருந்த அனைத்து சொத்துக்களையும் அழித்ததுடன் தீயிட்டு எரித்தனர்.

எனினும், வீட்டிற்கு தீ வைக்கப்பட்டதையடுத்து, ஞானக்காவின் வீட்டை விட்டு பாதுகாப்பு படையினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்