மஹேல தலைமையிலான நடைபவனி கொழும்பை வந்தடைந்தது

Published By: MD.Lucias

25 Oct, 2016 | 02:32 PM
image

புற்றுநோய் வைத்தியசாலை ஒன்றினை காலி, கராபிட்டியவில் அமைப்பதற்கான பாதயாத்திரை சற்றுமுன்னர் கொழும்பு காலிமுகத்திடலை வந்தடைந்தது.

 ஜா-எலையில் இன்று காலை 5.30 மணிக்கு ஆரம்பமான பாதயாத்திரை இன்று காலை கொழும்பை வந்தடைந்தது.

காலி, கராபிட்டியவில் புற்று நோய் வைத்தியசாலை அமைப்பதற்கு 50 மில்லியன் ரூபா நிதி சேகரிக்கும் முகமாக 670 கிலோ மீற்றர் தூரம் பாதயாத்திரை கடந்த 6ஆம் திகதி  வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் பருத்தித்துறையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்த யாத்திரையில் இலங்கையின் நட்சத்திர வீரர்களான மஹேல ஜயவர்தன, குமார் சங்கக்கார ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது.

இருப்பினும் தற்போது மஹேல ஜயவர்தன தலைமையிலான குழுவினரே நிதி சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொழும்பை வந்தடைந்துள்ளனர்.

காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் புதிதாக புற்றுநோய் சிகிச்சைப்பிரிவொன்றை நிர்மாணிப்பதற்கான 5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை திரட்டும் நோக்குடன் யாழ். பருத்தித்துறையிலிருந்து மாத்தறை தெய்வேந்திரமுனை வரையான நடைபவனி 20ஆவது நாளான இன்று (25) காலிமுகத்திடலை வந்தடைந்தது.

நேற்று காலை ஜா எல பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு ஆரம்பமான இந்த நடைபவனியில் நான்காயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துகொண்டதாக Trail செயற்திட்டத்தின் ஏற்பாட்டாளரான நாதன் சிவகணநாதன் தெரிவித்தார்.

இலங்கை முழுவதுமுள்ள சமூகங்களை ஒன்றிணைத்து, புற்றுநோய்க்கு எதிராக போராடும் ஒரு முயற்சியாக Trail 2016 நடைபவனி ஏற்பாடு செய்யப்பட்டது. 

இனங்களுக்கிடையே ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தும் செய்தியை நடைபவனியின் மூலம் எடுத்துச் செல்வதுடன் புற்றுநோய் சிகிச்சைக்கு உதவுவதற்கு நிதிதிரட்டும் முயற்சியில் Colours of Courage தொண்டு நிறுவனத்துடன் இணைந்து வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

இத்திட்டத்திற்கு வடக்கில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மக்கள் தாமாக வந்து தமது கையிலிருக்கும் சிறுதொகை பணத்தை நன்கொடையாக வழங்கி இந்த செயற்திட்டத்திற்கு ஊக்கமளித்தனர். நடைபவனியாக வரும் வழியின் இருமருங்கிலும் மக்கள் அளித்த ஆதரவை வார்த்தைகளால் விபரிக்க முடியாது.

கடந்த ஒக்டோபர் 6 ஆம் திகதி யாழ். பருத்தித்துறையில் ஆரம்பமான இந்த நடைபவனியில் முதல் பத்து நாட்களும் மிகவும் கடினமானதாக இருந்தது. வடக்கில் வெயிலுடன் கூடிய கடும் வெப்பம் நிலவியதால் கால்கள் கொப்பளித்த நிலையில் ஒவ்வொரு நாளும் 23 கி.மீ. தூரம் நடந்தோம். 

மனித நேயத்தின் பேரில் வியக்கத்தக்க சேவையை Trail செயற்திட்ட குழுவினர் செய்து வருகின்றனர். தெற்கு நோக்கிய நடைபவனியில் 474 கி.மீ நிறைவு செய்துள்ளதுடன் இன்னும் 196 கி.மீ பயணிக்க வேண்டியுள்ளதாகத் தெரிவித்த சிவகணநாதன் இந்த நடைபவனியில் இணைந்து கொள்ள விரும்புவோர், தமது உடற்தகுதிக்கு ஏற்றவாறு முழுத் தூரத்தையும் நடைபவனியாக செல்லமுடியும், இடைவழியில் இணைந்து கொள்ளவும் முடியும் அல்லது மறைமுகமாக வேறு வகையிலான ஆதரவகளை வழங்க முடியும் என்றார்.

இந்த நடைபவனியின் ஆரம்பத்திலிருந்தே கலந்து கொண்டு முழுமையான பங்களிப்பை செய்துவரும் Trail வர்த்தகநாம நல்லெண்ணத் தூதுவரான இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்த்தன கருத்து தெரிவிக்கையில்,

நடைபவனியின்போது மக்கள் அளித்த ஆதரவை என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். கிராம மக்கள் வீதிக்கு வந்து எம்முடன் இணைந்து பல்வேறு பங்களிப்புகளை வழங்கினர். 

அவர்கள் அனைவருக்கும் Trail  சார்பில் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உத்தேச திட்டத்திற்கான நிதியைத் திரட்டும் எமது முயற்சியின் ஒரு பகுதியை நிறைவு செய்திருந்தாலும் போதிய நிதி சேகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

 கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்படவுள்ள புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் முதன் முதலாக சிகிச்சை பெறும் நோயாளி மிகவும் கொடுத்துவைத்தவராக இருப்பார் என்றார்.

இந்நிலையில், நாளை புதன்கிழமை காலை 6.00 மணிக்கு காலிமுகத்திடலில் யோகாசனப் பயிற்சியின் பின்னர் 7 மணிக்கு மொறட்டுவை நோக்கி நடைபவனி ஆரம்பமாகும்.

 நன்கொடைகள் வழங்க விரும்புவோர் டயலொக் செய்தி அனுப்பல், ஸ்டார் புள்ளிகள் அல்லது ஈஸி கேஷ் (eZ Cash) முறை மூலமாகவோ, www.trailsl.com என்ற உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலமாகவோ அல்லது Colours of Courage Trust தொண்டு நிறுவனத்திற்கு Colours of Courage Trust (Guarantee) Limited, Account Number 003010491671, Hatton National Bank (SWIFT CODE – HBLILKLX). மூலமாக நேரடியாக வைப்பு செய்வதன் மூலம் பொதுமக்களும் தமது நன்கொடைகளை வழங்கி பங்களிப்புச் செய்ய முடியும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04