நாட்டில் இடம்பெறும் வன்முறைச் செயல்களை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வன்முறை தற்போதைய பிரச்சனைகளை தீர்க்காது. அனைத்து பிரஜைகளையும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படுமாறு கேட்டுக்கொள்கிறேன்.  

நெருக்கடியை தீர்க்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.