இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் அகதி வாழ்க்கை வாழ்ந்த 25 பேர் இன்று தாயகம் திரும்புகிறார்கள்.

சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி இதுதொடர்பாக தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிராயலத்தின் ஊடாக இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படுகிறார்கள். 

இவர்கள் மன்னார், திருகோணமலை, வவுனியா, மாத்தறை, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் மீள்குடியேற்றப்பட உள்ளதாக குறிப்பிட்டார்.

இது தவிர 6 மாத காலத்திற்கு உலர் உணவு வழங்கவும் அனுமதி கிடைத்திருப்பதாக அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சு முன்னெடுக்கும் வீடமைப்பு திட்டத்தின் கீழ் இவர்களுக்கான வீடுகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.