(என்.வீ.ஏ.)
டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு எதிராக மும்பை டி. வை. பட்டில் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (08) இரவு நடைபெற்ற ஐ.பி.எல். இருபது 20 கிரிக்கெட் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் 91 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
டெவன் கொன்வே, ருத்துராஜ் கய்க்வாட் ஆகியோரின் அதிரடி துடுப்பாட்டங்களும் பந்துவிச்சாளர்களின் கட்டுப்பாட்டுடனான பந்துவீச்சுகளும் சென்னையை வெற்றி அடையச் செய்தன.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 208 ஓட்டங்களைக் குவித்தது.
ரத்துராஜ் கய்க்வாட், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 11 ஓவர்களில் 110 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
திறமையாகத் துடுப்பெடுத்தாடிய ருத்துராஜ் கய்க்வாட் 41 ஓட்டங்களுடன் முதலாவதாக ஆட்டமிழந்தார்.
ஷிவம் டுபேயுடன் 2ஆவது விக்கெட்டில் மேலும் 59 ஓட்டங்களைப் பகிர்ந்த கொன்வே 89 ஓட்டங்களுடன் வெளியேறினார். 49 பந்துகளை எதிர்கொண்ட கொன்வே, 7 பவுண்டறிகளையும் 5 சிக்ஸ்களையும் விளாசினார்.
அதன் பின்னர் ஷிவம் டுபே (32) அம்பாட்டி ராயுடு (5), மொயின் அலி (9), ரொபின் உத்தப்பா (0) ஆகியோர் ஆட்டமிழந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM