பாரி­ச­வா­த­மா­னது உடல் உறுப்­புக்­களை செய­லி­ழக்­கச் ­செய்து ஈற்றில் இறப்­புக்கும் வழி­வ­குக்­கி­றது. அத்­துடன்  சர்­வ­தேச அளவில் செக்­க­னிற்கு அறுவர் இந்­நோ­யினால் பாதிக்­கப்­பட்டு உயி­ரி­ழக்­கின்­றனர்  என நரம்­பியல்  விசேட வைத்­திய நிபுணர் டாக்டர்  உதய ரண­வக்க தெரி­வித்தார்.

இது அதி­க­மான உயி­ரி­ழப்­புக்­க­ளுக்கு கார­ண­மா­க­வி­ருக்கும் நோய்­களில் இரண்­டா­மி­டத்தைப் பிடித்­தி­ருப்­ப­தா­கவும் அவர்  மேலும் சுட்­டிக்­காட்­டினார்.

 எதிர்­வரும் 29 ஆம் திகதி சர்­வ­தேச பாரி­ச­வாத தினம் அனுஷ்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது. இத­னை ­முன்­னிட்டு குடும்ப சுகா­தார பணியகத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பின்  போதே  அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில்,

இலங்­கையில் தொற்­று­நோய்கள் பெரு­ம­ளவு கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள போதும், தொற்றா நோய்­களின் தாக்கம் அதி­க­ரித்­துள்­ளது. ஆகையால் நாட­ளா­விய ரீதியில் தொற்றா நோய்கள் குறித் தும் விசேட கவனம் செலுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

பாரி­ச­வா­த­மா­னது உட­ன­டி­யாக கையா­ளப்­ப­ட­வேண்­டிய அவ­சர நோய் நிலை­யாகும். இது மூளையின்  ஒரு பகு­தியில் இரத்­த­வோட்டம்  தடைப்­ப­டு­வ­தனால் ஏற்­ப­டு­கின் ­றது. இதனால் மூளைக்குத் தேவை­யான ஒட்­சிசன்  தடைப்­பட்டு மூளை பாதிக்­கப்­ப­டு­கின்­றது.

உல­க­ளா­விய ரீதியில் பாரிச வா­தத்­தினால் ஒவ்­வொரு 6 செக்­க­னுக்கும்  ஒருவர் உயி­ரி­ழக்­கின்றார். அது­மாத்­தி­ர­மன்றி உலக இறப்பு வீதத்தில் இந்நோய் இரண்­டா­வது இடத்தில் காணப்­ப­டு­கி­ன்ற­மையும் எடுத்­துக்­காட்­டத்­தக்­கது.

பாரி­ச­வா­தத்­தினால் அதி­க­மானோர் பாதிக்­கப்­பட்­டாலும்  வைத்­தி­ய­சா­லைக்கு சிகி ச்சை பெற வரு­ப­வர்­களின் எண்­ணிக்கை கணி­ச­மான அளவு குறை­வாக உள்­ள­தாக வைத்­திய அறிக்­கைகள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன. இதற்­கான பிர­தான காரணம் அறி ­யாமை என்­பதும் இங்கு எடுத்­தி­யம்­பத்தக்­ கது.

 ஆகை­யினால் மக்­க­ளுக்கு பாரி­ச­வாதம் தொடர்­பான விழிப்­பு­ணர்வு அவ­சியம். பாரி­ச­வாத நோய்க்கு சிகிச்­சை­யுண்டு என்­ப­தனை மக்கள் மத்­தியில் கொண்டு செல்­வதே எமது பிர­தான நோக்­க­மாகும். இத­னை­யி ட்டு முடி­யு­மா­ன­வரை  விரைந்து செயற்­ப­ட­ வேண்­டிய தேவை­யுள்­ளது. 

உணவு கட்­டுப்­பா­டின்மை, உடற்­ப­யிற்­சி­களை முறை­யாக மேற்­கொள்­ளாமை, புகை த்தல், மது­பா­வனை,  உப்பு, சீனி போன்­ற­வற்றை அதி­க­ளவு உணவில் சேர்த்­துக்­கொள்­ளுதல் போன்­றன பாரிசவாதம் ஏற்­ப­டு­வதை அதி­க­ரிக்­கக்­ கூ­டிய  பிர­தான கார­ணிகள் ஆகும். முறை­யான சிகிச்­சை­களை மேற்­கொள்­வதன் மூலம் பாரி­ச­வா­தத்­­தினை இயன்­ற­ளவு குறைத்­துக் ­கொள்­ளலாம்  மேலும் உப்பு பாவ­னையை குறைப்­ப­துடன்,  மரக்­கறி மற்றும் பழ­வ­கைகள்  அதி­க­ளவில் உட் ­கொள்­வதும் இன்­றி­ய­மை­யா­த­தாகும்.

இந்­நோய்க்கு முறை­யான வைத்­திய ஆலோ­ச­னை­களும் அவ­சியம் என்­பதால் நோய்க்­கான அறி­கு­றிகள் தென்­படும் போதே  வைத்­தி­யரை நாடு­வது முக்­கி­ய­மா­னது. குடும்­பத்தில் ஒரு­வ­ருக்கு பாரி­ச­வாதம் ஏற்­ப­டு­மி­டத்து இதனால் முழு­க்கு­டும்­ப மும் பாதிக்­கப்­படும் நிலை உரு­வா­கி­றது.  இந்நோய் குறித்த விழிப்­பு­ணர்வு முறை­யாக மக்­களை சென்­ற­டையும் நோக்­கோடும் இத்­தி­னத்தில் நாட்டின் பல மாவட்­டங்­க­ளிலும்  தெளி­வூட்டல் நட­வ­டிக்­கை­களை  மேற்­கொள்ள நட­வ­டிக்கை எடுத்­துள்ளோம். பாரி­ச­வாதம் தொடர்­பான பரி­சோ­த­னைகளை அதற்­கான குறித்த மத்­தி­யஸ்­தா­னங்­களில் பெற்­றுக்­கொள்­ளலாம்.

இன்­றைய வைத்­திய தொழில்நுட்ப முன் னேற்றத்தால் இந்நோய்க்கான சிகிச்சை களை  பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற் படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது. என்ன தான் வைத்திய வசதிகள் மக்களுக்கு ஏற் படுத்திக் கொடுக்கப்பட்டாலும் அவர்கள் அதனை முறையாக அணுகும் பட்சத்தில் தான் அதற்கான தீர்வுகளையும் பலனையும் முழுமையாக பெற்றுக்கொள்ள முடியும். பாரிச வாதத்தின் அறிகுறிகளை அடை யாளம் காண்பது முக்கியமானது எனவும் குறிப்பிட்டார்.