(எம்.மனோசித்ரா)
நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி எவ்வாறு பதிலளிக்கின்றார் என்பதை அடிப்படையாகக் கொண்டே எம்மால் தீர்க்கமானதொரு முடிவிற்கு வர முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்ரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் தெரிவித்தார்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துடன் ஞாயிற்றுக்கிழமை (8) நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளுக்கு ஜனாதிபதி எவ்வாறு பதிலளிக்கின்றார் என்பதை அடிப்படையாகக் கொண்டே எம்மால் தீர்க்கமானதொரு முடிவிற்கு வர முடியும். ஸ
எதிர்க்கட்சி தலைவருக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை இதற்கு முன்னரே எடுக்கப்பட்டிருக்க வேண்டிய தீர்மானமாகும்.
தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் மிகவும் கால தாமதமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் முறையானதொரு தரப்பினரின் தலையீட்டுடன் இது தொடர்பில் அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கு நாம் தயாராக உள்ளோம்.
எவ்வாறிருப்பினும் அரசாங்கத்திலுள்ளவர்கள் மக்களின் குரலுக்கு செவி சாய்க்காமல் பதவியிலிருந்து விலகாது எமக்கு அழைப்பு விடுக்கின்றனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் முன்னோக்கிச் செல்ல முடியாது. எனவே நம்பிக்கையை உறுதிப்படுத்துவதற்கு சட்டத்தரணிகள் சங்கம் போன்ற ஏற்றுக் கொள்ளப்பட்ட தரப்பு இதில் தலையிட வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM