கண­வ­ருக்கு மயக்க மருந்து கொடுத்து மனைவி கள்­ளக்­கா­த­லனுடன் வீட்டில் உறங்­கிக்­ கொண்­டி­ருந்தவேளை கண­வரின் உற­வி­னர்­க­ளினால் தாக்­கு­த­லுக்­குள்­ளான பெண் திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக கோம­ரங்­க­ட­வெல பொலிஸார் தெரி­வித்­தனர். இவ்­வாறு தாக்­கு­த­லுக்­குள்­ளான பெண் அதேயிடத்­தைச்­ சேர்ந்த மூன்று பிள்­ளைகளின் தாயா­ரான 36 வய­து­டை­யவர் எனவும் தெரி­ய­வ­ரு­கின்­றது. இச்­சம்­பவம் நேற்­று­முன்­தினம் ஞாயிற்­றுக்­கி­ழமை நடை­பெற்­றது.

சம்­பவம் குறித்து தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

கண­வனும் மனை­வியும் வழ­மை­யாக பக்­கத்து வீட்­டிற்கு செல்­வ­தா­கவும் சம்­பவ தினம் அங்கு வரா­த­மை­யினால் பக்கத்து வீட்டார் மனை­வியை அழைத்து ஏன் வர­வில்லை  என விசா­ரணை செய்த போது அவர் தூங்­கு­வ­தாக தெரி­வித்­துள்ளார்.

இதே­வேளை, வீட்­டுக்கு மோட்டார் சைக்கிள் வந்­ததை அவ­தா­னித்த அயலவர் கள் தொலை­பேசி மூலம் உற­வி­னர்­க­ளுக் கும் தெரி­யப்­ப­டுத்­தி­ய­தை­ய­டுத்து அங்கு விரைந்த உற­வி­னர்கள் மூடிக்­கி­டந்த வீட்டை திறக்­கு­மாறு கூறி­ய­தை­ய­டுத்து கதவை திறக்­கா­த­மை­யினால் கதவை உடைத்து உள்ளே இருந்த நப­ரையும் பெண்­ணையும் தாக்­கி­யுள்­ளனர்.

தாக்­கு­தலில் காய­ம­டைந்த பெண் திரு­கோ­ண­மலை பொது வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­துடன் கணவர் மயக்க முற்ற நிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இச் சம்பவம் தொடர் பில் விசாரணைகளை கோமரங்கடவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.