கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள ஊடகத்துறை 

08 May, 2022 | 04:16 PM
image

ரொபட் அன்டனி 

''பத்திரிகை சுதந்திரம் இல்லாமல், உண்மையான ஜனநாயக சமூகங்கள் இல்லை. பத்திரிகை சுதந்திரம் இல்லாமல் சுதந்திரம் இல்லை.   எனினும்  பல பக்கங்களில் இருந்து அவர்களை மௌனப்படுத்தும் முயற்சிகளை எதிர்கொள்கின்றனர்.

 ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக ஊழியர்களின் சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. போர் வலயங்களில் உள்ள ஊடகத் தொழிலாளர்கள் குண்டுகள் மற்றும் தோட்டாக்களால் மட்டும் அச்சுறுத்தப்படுவதில்லை.

 ஆனால் நவீன யுத்தத்துடன் வரும் பொய்மைப்படுத்தல் மற்றும் தவறான தகவல்களின் ஆயுதங்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். வெறுமனே தங்கள் பணிகளை செய்ததற்காக அவர்கள் எதிரியாக தாக்கப்படலாம், உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்படலாம், தடுத்து வைக்கப்படலாம் அல்லது கொல்லப்படலாம்''

உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ்  விடுத்துள்ள அறிக்கையிலேயே  இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.  இம்முறை உலக ஊடக சுதந்திர தினம் டிஜிட்டல் ஆதிக்கத்தின் கீழ் ஊடகவியல்  என்ற  தொனிப்பொருளில் அனுஷ்டிக்கப்படுகின்றது.  

உண்மையில் உலகில்   மக்களுக்கு உண்மையான சரியான தகவல்களை நம்பகரமாக வெளிப்படுத்துவதற்காக ஊடகவியலாளர்கள் பல சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்கின்றனர்.     

பாரிய இழப்புக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு மத்தியிலேயே ஊடகவியலாளர்கள் தமது கடமையை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.  மக்களுக்கு உண்மையான நம்பகரமான செய்திகள் வருகின்றன என்றால் அதன் பின்னணியில்  ஊடகவியலாளர்களின் பாரிய தியாகங்களும்  அர்ப்பணிப்பும் இருக்கின்றன.

இந்நிலையில் மே மாதம் 3 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனம், யுனெஸ்கோ  அமைப்பு, மற்றும்  ஐரோப்பிய  ஒன்றியம்  ஆகியவற்றின்  ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க   ஞாபகார்த்த சர்வதேச  மாநாட்டு மண்டபத்தில் கடந்த புதன்கிழமை ஒரு மாநாடு நடத்தப்பட்டது.  

இதில் ஐரோப்பிய ஒன்றியம், யுனெஸ்கோ, ஐக்கிய நாடுகள் சபை ஆகியவற்றின்  பிரதிநிதிகள், சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகள், பத்திரிகை ஸ்தாபனத்தில்  பிரதிநிதிகள் மற்றும்  ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். 

நிகழ்வில்  யுனெஸ்கோ  அமைப்பின்  ஆதரவுடன் சர்வதேச  ஊடகவியலாளர்  சம்மேளனத்தின்  2022 ஆம் ஆண்டுக்கான   தெற்காசிய  ஊடக சுதந்திர அறிக்கையும் வெளியிடப்பட்டது.இதில்  தெ ற்காசிய  நாடுகளின் ஊடகங்கள்  ஊடகவியலாளர்கள்  எதிர்கொள்ளும்  சவால்கள்   என்பன    விரிவான முறையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

ஐக்கிய நாடுகள் சபையின்  இலங்கைக்கான  பிரதிநிதி  ஹனா சிங்கர்  யுனெஸ்கோவின்   இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவு  ஆகிய நாடுகளுக்கான  பணிப்பாளர்  எரிக் போல்ட்   இலங்கைக்கான  ஐரோப்பிய  ஒன்றியத்தின் தூதுவர்  டெனீஸ்  சய்பி, சிரேஷ்ட  இலங்கையின் சிரேஷ்ட புலனாய்வுத்துறை  ஊடகவியலாளர்   நாமினி விஜயதாச  ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். 

மேலும்   இந்தியா, ஆப்கானிஸ்தான், பூட்டான்,  மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான்  மற்றும்  இலங்கை     ஆகிய நாடுகளின்  சிரேஷ்ட ஊடகவியலாளர்கள்  அந்ததந்த நாடுகளின் தற்போதைய  ஊடக  சுதந்திர நிலைமை,  சமூக ஊடகங்களின்   பயன்பாடு, டிஜிட்டல் ஆதிக்கம்,   அரசாங்கங்களின் தலையீடுகள்,  போலி  செய்திகளின் விளைவுகள்   உள்ளிட்ட பல்வேறு  பல்வேறு விடயங்கள்  தொடர்பாக  மெய்நிகர்  வழியாக  உரையாற்றியிருந்தனர் .  

இதன்போது   பிரதான உரையை நிகழ்த்தியவர்கள் பல முக்கிய விடயங்களை முன்வைத்தனர்.  முக்கியமாக ரஷ்ய - உக்ரேன் யுத்தத்தில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், உலகளாவிய ரீதியில் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள், பெண் ஊடகவியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், தொழில் ரீதியான அழுத்தங்கள்,  பொருளாதார ரீதியான சவால்கள்,  புலனாய்வு துறை ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல விடயங்கள்  முன்வைக்கப்பட்டன. 

ஊடகவியலாளர்களை முன்னிலை கள பணியாளராக அங்கீகரியுங்கள் - யுனெஸ்கோ

முதலாவதாக இந்த மாநாட்டில்  யுனெஸ்கோவின்   இலங்கை, பூட்டான், இந்தியா, மாலைதீவு  ஆகிய நாடுகளுக்கான  பணிப்பாளர்  எரிக் போல்ட்   உரையாற்றுகையில் கடந்த இரண்டுவருட காலங்களில் ஊடகவியலாளர்கள் பல சவால்களை சந்தித்து வருகின்றனர்.  

பல ஊடகவியலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் வன்முறைகள்,  கொலை அச்சுறுத்தல், சித்திரவதை, கண்காணிப்பு உள்ளிட்ட நிலைமைகளை அவர்கள் எதிர்கொள்கின்றனர். குறிப்பாக ஆப்கானிஸ்தானில் ஊடகவியலாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து பார்க்கப்படவேண்டும்.  தெற்காசியாவை பொறுத்தவரை  ஊடகவியலாளர்கள் முன்னிலை கள பணியாளர்களாக பார்க்கப்படவேண்டும்  என்று குறிப்பிட்டார்.  

கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் சட்டங்கள் - ஐ.நா. பிரதிநிதி 

தொடர்ந்து ஐக்கிய நாடுகள் சபையின்  இலங்கைக்கான  பிரதிநிதி  ஹனா சிங்கர் உரையாற்றுகையில்  ஊடகத்துறை என்பது முயற்சிகள் மற்றும் தியாகங்கள், பல சமயங்களில் பெரும் தனிப்பட்ட ஆபத்துகளுடன் வரும் ஒரு தொழில் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்களின் யுகத்தில்இ இந்த அபாயங்கள் மற்றும் தியாகங்கள் பலதரப்பட்ட வழிகளால் அதிகரித்துள்ளன. 

இதில் அரச மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் கண்காணிப்பும்  பத்திரிகைஇ கருத்து சுதந்திரம் மற்றும் தனியுரிமை ஆகியவற்றை பாதிக்கிறது.  டிஜிட்டல்  விடயங்களை  பயன்படுத்தும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்புஇ கருத்துச் சுதந்திரம்இ பத்திரிகை சுதந்திரம் மற்றும் தனியுரிமைப் பாதுகாப்பு  என்பனவற்றில் தாக்கங்கள் உள்ளன. உலகம் முழுவதும் புதிய சட்டங்களும் கொள்கைகளும் இணைய கருத்துச் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகின்றன.

 2016 ஆம் ஆண்டிலிருந்து பல சட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன அல்லது திருத்தப்பட்டுள்ளனஇ அவை இணைய கருத்துச் சுதந்திரத்தை அச்சுறுத்தும் சமமற்ற தண்டனைகளைக் கொண்டிருக்கின்றன. ஆசிரியர்பீட சுதந்திரமானது  பொருளாதார சுதந்திரம் இன்மையால் பாதிக்கப்படுகின்றது. ஊடகங்கள் என்பது பாதுகாக்கப்பட வேண்டிய உலகளாவிய பொது சொத்தாகும் என்றார். 

மறைந்திருக்கும் வலைகளை அவிழ்க்க எம்மால் முடியும் - சிரேஷ்ட ஊடகவியலாளர் நாமினி 

தொடர்ந்து இந்த நிகழ்வில் இலங்கையின் சிரேஷ்ட புலனாய்வுத்துறை  ஊடகவியலாளர்   நாமினி விஜயதாச உரையாற்றுகையில் இந்த ஆண்டு உலக பத்திரிகை சுதந்திர தினத்தின் கருப்பொருள் ‘டிஜிட்டல் ஆதிக்கத்தின் கீழ் ஊடகவியல்’ என்பதாகும்.  நாம் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பலதரப்பட்டவை. டிஜிட்டல் அவற்றில் ஒன்று எனினும் மிகவும் சிக்கலானது. எனது மூலங்களை பாதுகாப்பதற்காக  எனது தொலைபேசி இ  தொலைபேசி இலக்கங்களை மாற்றவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால் ஆபத்து உருவாகிறது. ஆவணங்களை எவ்வாறு பாதுகாப்பாக மாற்றுவது? எங்கள் சாதனங்கள் கையகப்படுத்தப்பட்டால்,  எங்கள் தொடர்புகள் இழக்கப்படாமல்  இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது? நமது ஆதாரங்களை எவ்வாறு பாதுகாப்பது? எப்படி நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வது? இடைவிடாத  இணைய தாக்குதல்களில் இருந்து, நமது மன ஆரோக்கியத்துடன் எவ்வாறு தப்பிப்பது? நாம் யாரை நம்புவது? நாம் எப்படித் தொடர்ந்து அறிக்கையிடுவது?   போன்ற விடயங்கள் உள்ளன. ஆனால் தொடர்ந்து முயற்சி செய்வது முக்கியம். என் அனுபவத்திலிருந்து ஏன் என்று நான் உங்களுக்கு சொல்கிறேன். 

ஊழல் குறித்து நான் அறிக்கையிடுகிறேன்.  புலனாய்வுப் பத்திரிக்கையாளராக இருப்பது ஒரு தனிமையான இருப்பு என்று நான் அடிக்கடி சொல்வேன்.  வெறுப்பாகவும் இருக்கிறது. ஏனென்றால் ஊழல் உலகை ஆள்கிறது. மேலும், ஊழல்,  தீர்வுகள் எட்டாததாகத் நிலைக்கு மோசமாகியுள்ளது.  எனது ஆசிரியரிடம் நான் பலமுறை  நாம் ஏன் இதைச் செய்கிறோம்? என கேட்டுள்ளேன். "  “ஏனென்றால் இது எங்கள் கடமை. எங்களால் முடிந்ததை நாங்கள் செய்கிறோம் என்று அவர் பதிலளித்துள்ளார். பாதுகாப்பைப் பொறுத்தவரை, அறியப்படாத அச்சுறுத்தல்  வரும். எங்கள் குடும்பங்களும் பாதிக்கப்படுகின்றன.   அச்சங்கள், விரக்தி ஆகியவை வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளை பாதிக்கலாம். அவர்களின் ஆதரவும் புரிதலும் இல்லாவிட்டால், நமது பணி மிகவும் கடினமாக இருக்கும்.  

ஆனாலும் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். நிச்சயமாக, சமூக ஊடகங்கள் ஊடாக  தகவல் ஏதோ ஒரு வடிவத்தில் பொதுமக்களை சென்றடைகிறது. ஆனால் சமூக ஊடகங்கள் தொழில்முறை ஊடகவியலின் தேவையை ஒழிக்கவில்லை - பிடிவாதமாக சரிபார்க்கும், உறுதிப்படுத்தும், பல ஆதாரங்களுடன் குறுக்கு சோதனை செய்து, நம்பக்கூடிய வடிவத்தில் செய்திகளை வழங்கும் ஊடகவியல் வகை முக்கியமானது.  

அதனால் நாம் விட்டுக் கொடுப்போமா? இல்லை. எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். நாங்கள் அடுத்த சுழற்சியை நோக்கமாகக் கொண்டுள்ளோம். ஏனென்றால், பத்திரிகையாளர்களாகிய நாங்கள் சில தெளிவைக் கொண்டுவரவும், உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டவும் உதவுகிறோம். 

அதற்கான பயிற்சியை பெற்றுள்ளோம். மறைந்திருக்கும் வலைகளை அவிழ்க்க, புரிந்துகொள்ள. எங்களுக்கு அணுகல்,  உரிமை, திறமை  அதிகாரம் உள்ளன. நாங்கள் பல தசாப்தங்களாக அச்சுறுத்தல்களைப் கடந்து  சிறந்த தீர்வுகளைத் தேடுகிறோம். அது தொடர வேண்டும்  என்று முக்கியமான விடயங்களை குறிப்பிட்டார்.  

ஊடகவியலாளர்களை காப்பது  ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னுரிமை - தூதுவர் 

மேலும்  ஐரோப்பிய  ஒன்றியத்தின் தூதுவர்  டெனீஸ்  சய்பி இந்த நிகழ்வில் உரையாற்றுகையில் பத்திரிகையாளர்களுக்கு அமைதியான காலங்களில் சவால்கள் சமமாக உள்ளன. ஐரோப்பிய ஆணைக்குழு துணை தலைவர் ஜூரோவா சமீபத்தில் "ஊடகங்கள் ஜனநாயகத்தின் தூண். இன்று இந்த தூண் மீது அழுத்தம் கொடுக்க அரசு மற்றும் தனியார் குழுக்கள் முயற்சிகள் உள்ளன என்று குறிப்பிட்டிருந்தார்.  ஊடகங்களின் பன்மைத்துவத்தையும் சுதந்திரத்தையும் பாதுகாப்பதற்காக ஐரோப்பிய ஊடக சுதந்திரச் சட்டம், கொண்டுவரப்படவுள்ளது.  பத்திரிகையாளர்களின் பாதுகாப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலையான முன்னுரிமையாக இருந்து வருகிறது  என்று குறிப்பிட்டார். 

இந்நிலையில் நிகழ்வை தொகுத்து வழங்கிய பத்திரிகை ஸ்தாபனத்தின்    பிரதம நிறைவேற்று அதிகாரி குமார் லோபஸ் ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் மற்றும்  உலக ஊடக நிலைமை உள்ளிட்ட பல்வேறு நிலைமைகள் குறித்து அவ்வப்போது கருத்துக்களை முன்வைத்தார். 

தெற்காசிய ஊடகவியலாளர்களை பாதுகாக்க பொறிமுறை அவசியம் 

மேலும் உலக ஊடக சுதந்திர நிகழ்வின் இறுதியில் யுனெஸ்கோ  அமைப்பின்  தெற்காசியாவுக்கான  தொடர்பாடல்  மற்றும் தகவல் ஆலோசகர் ஹிசெகீல்  ட்லமினி  ஐந்து பரிந்துரைகளை  முன்வைத்தார்.  அதாவது தெற்காசியாவின்  ஊடகவியலாளர்களின்  பாதுகாப்பை உறுதிப்படுத்த    ஒரு பொறிமுறையை  உருவாக்க வேண்டும்.

 பெண் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவேண்டும்.  தெற்காசிய மற்றும் உலக ஊடவியலாளர்களின் சம்பள விவகாரம் குறித்து ஆராய விசேட தூதுவர் ஒருவர் நியமிக்கப்படவேண்டும், ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிகள் மற்றும் கருத்து சுதந்திரத்தை பலப்படுத்தல்,  பிராந்தியத்தில் ஊடகவியலாளர்களின் திறனை வளர்க்கவேண்டும்,    பொலிஸார் மற்றும் நீதித்துறை அதிகாரிகளுடன் திறன் வளர்த்தல் திட்டத்தை முன்னெடுக்கவேண்டும்இ இவ்வாறு  அவர் பரிந்துரைகளை முன்வைத்தார். 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துறக்காத துறவிகள் பயிர்களை மேயும் பேராபத்து

2024-03-01 20:47:19
news-image

சிங்களவர்களுக்கும் இலங்கைத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள...

2024-03-01 17:27:58
news-image

மன்னார் காற்றாலை திட்டத்தால் சுற்றுச்சூழல், பொருளாதார...

2024-03-01 16:20:49
news-image

எதிர்மறையான சமாதானத்தில் இருந்து நேர்மறையான சமாதானத்துக்கு...

2024-03-01 15:04:45
news-image

விடியும் வேளையில் வரப்போகும் திருப்பங்கள்

2024-02-28 18:49:12
news-image

வடக்கு, கிழக்கில் சுதந்திரமான ஆலய வழிபாட்டுக்கும் ...

2024-02-28 18:04:16
news-image

பத்தாயிரம் வீட்டுத்திட்டமும் பத்து பேர்ச் காணி...

2024-02-28 13:52:19
news-image

பூமியின் நுரையீரலில் மிக பெரிய அனகொண்டா

2024-02-28 11:03:34
news-image

அடையக்கூடிய எல்லைக்கு நல்லிணக்கத்தைக் கொண்டுவருதல்

2024-02-27 14:27:33
news-image

இலங்கையில் பெண் கைதிகள் சடுதியாக அதிகரிப்பு…!

2024-02-27 13:50:28
news-image

இனி என்னை அப்பா என்று யார்...

2024-02-27 12:10:48
news-image

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலை மோசடிகளால் அழிகிறதா?

2024-02-27 16:00:41