சஜித்திடம் ஜனாதிபதி விடுத்த கோரிக்கை என்ன ? அதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் பதில் இதோ !

08 May, 2022 | 10:54 AM
image

(ஆர்.ராம்)

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான சஜித் பிரேமதாசவை பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனை அடுத்து அவசரமாக கூடிய ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக்குழுவானது, தேசிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்று தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஆதரவளிக்கத்தயார் என்று குறிப்பிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அத்துடன் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சாலிய பீரிஸுக்கும் அச்சங்கத்தின் தேசிய நெருக்கடிகளுக்கான தீர்வாக பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தனிநபர் பிரேரணையாக சமர்பிக்கப்பட்ட 21 ஆவது திருத்தச்சட்டத்துடன் இணக்கமாக காணப்படுவதால் அதனை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி கடிதம் மூலம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரிவருவதாவது,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் பதவியை ஏற்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடத்தில் விடுத்துள்ள நேற்றுக் காலையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடலின்போது மீண்டும் விடுத்திருந்தார். 

இருப்பினும் சஜித் பிரேமதாச, தான் மக்கள் ஆணையுடனேயே பதவிகளை ஏற்க விரும்புகின்றேன். அதில் எவ்விதமான மாற்றமும் இல்லை என்று பதிலளித்துள்ளார்.

எனினும், ஜனாதிபதி கோட்டாபய நாட்டில் ஏற்பட்டுள்ள தேசிய நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு விரும்புவதாகவும் அதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குமாறும் கோரியுள்ளார்.

இதன்போது, தான் தனது கட்சி மற்றும் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடிய பின்னரே உரிய பதிலொன்றை அளிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காலையில் ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் எதிர்க்கட்சித்தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.

சுமார் நான்கு மணித்தியாலங்கள் வரையில் ஜனாதிபதி கோட்டாபயவின் கோரிக்கை தொடர்பில் ஆராயப்பட்டது. இதன்போது பல்வேறு கருத்துப்பரிமாற்றங்களும் வாதப்பிரதிவாதங்களும் நிகழ்ந்துள்ளன.

குறிப்பாக, தற்போதைய ஜனாதிபதியை மக்கள் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வருகின்ற நிலையில் அவர் ஜனாதிபதி பதவியை தக்கவைத்துக் கொள்ளவதற்கு அனுமதிக்க கூடாது என்று பெரும்பான்மையான உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார்கள்.

எனினும் நாடு இக்கட்டான கட்டத்தில் இருக்கின்ற நிலையில், எதிர்க்கட்சியானது சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கு தயாராக உள்ளமையை வெளிப்படுத்துவதோடு நிபந்தனைகளுடன் ஜனாதிபதியின் கோரிக்கையை பரிசீலித்துப் பார்க்க வேண்டும் என்றும் சில உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள்.

இவ்வாறான நிலையில்ரூபவ் தேசிய நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் முகமாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ள பரிந்துரைகள் அடங்கிய யோசனையை கருத்திற்கொண்டு தீர்மானம் எடுக்க முடியும் என்று யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் யோசனையானது, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டரா தனிநபர் பிரேரணையாக சமர்பித்துள்ள 21ஆவது அரசியலமைப்புச் சட்டத்தினை ஒத்திருப்பதன் காரணமாக அதனை ஏற்றுக்கொள்வதில் பிரச்சினைகள் இல்லையென எதிர்க்கட்சித்தலைவர் உட்பட ஏனைய உறுப்பினர்கள் குறிப்பிட்டனர்.

இதனடிப்படையில், தேசிய நெருக்கடிகளுக்கு தீர்வுகாணும் முகமாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகள் அடங்கிய யோசனையை ஏற்றுக்கொள்வதாக அச்சங்கத்திற்கு கடிதம் மூலம் அறிவிப்பதெனவும் ஜனாதிபதி கோட்டாபயவும் அச்சங்கத்தின் யோசனைகளை முழுமையாக உள்ளீர்த்த தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு ஆதரவளிப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டு அது இருவேறு கடிதங்கள் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கண்டிப்பாக பதவி விலக வேண்டும் என்பதிலும் ஜனாதிபதி முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதிலும் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக உள்ளதோடு பாராளுமன்றத்திற்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் தெளிவாக வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகினால், சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் பெரும்பான்மையினரின் சம்மதத்துடன் ஜனாதிபதி பதவியை ஏற்க சம்மதிக்க வேண்டும் யோசனை முன்வைக்கப்பட்டது. எனினும், சஜித் பிரேமதாச அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை. 

அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமைக்கான அதிகாரங்களை முழுமையாக நீக்கி பாராளுமன்றத்திற்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் பாராளுமன்றத்தையும் ஜனநாயகத்தினையும் பலப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனடிப்படையில், ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கடிதம் அனுப்பபட்ட நிலையில் அவர் அதனை சாதகமாக பரிசீலித்தால் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதெனவும் இணக்கம் ஏற்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும் ஜனாதிபதி பதவி விலகி இடைக்கால அரசு உருவாக்கப்படுமாக இருந்தால் அதில் எவ்விதமான பதவிகளையும் சஜித் வகிக்கப்போவதில்லை என்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பிரதிநிதி நியமிக்கப்படுவதற்கான சத்தியப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, குறித்த பாராளுமன்றக் குழுக் கூட்டம் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி, நாட்டில் தற்போது நிலவும் பாரதூரமான தேசிய நெருக்கடிக்கு தீர்வு காண இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள முன்மொழிவுகள் தொடர்பில் கவனத்தை செலுத்தியுள்ளது.

மேலும் தற்போதைய ஜனாதிபதியை பதவியிலிருந்து நீக்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினாலும் முன்வைத்துள்ள நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் வேலைத்திட்டம் தற்போதைய தேசிய நெருக்கடியைத் தீர்ப்பதற்குமான ஒரு அடிப்படைத் தேவையாகக் கருதுவதாகவும் நாங்கள் தெரிவிக்கின்றோம்.

இதற்கமைவாக மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது என்று தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47