அவசரகால சட்ட பிறப்பிப்பு குறித்து அரசாங்கம் விளக்கம்

Published By: Digital Desk 3

07 May, 2022 | 09:50 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார மற்றும் சமூக நெருக்கடியை சமாளிப்பதற்கும், மக்களின் இயல்பு வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான சீர்திருத்தங்களுக்கு அவசியமான அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டே அவசரகால நிலைமை சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில் அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது. 

நாட்டில் மக்கள் அவசரகால நிலைமை நிலவுவதன் காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு, அமைதியைப் பாதுகாத்தல், பொது மக்களின் வாழ்வுக்கு அத்தியாவசியமான வழங்கல்கள் மற்றும் சேவைகள் என்பவற்றைப் பேணுவதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதற்கு சர்வதேசம் உட்பட பல்வேறு தரப்பினரும் விசனம் வெளியிட்டுள்ள நிலையிலேயே அரசாங்கம் மேற்கண்டவாறு அறிவித்துள்ளது. 

இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

குறுகிய கால மற்றும் நீண்ட கால விளைவுகளைக் கொண்ட பல காரணிகளின் விளைவாக, சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை இப்போது மிக மோசமான பொருளாதார,  சமூக நெருக்கடி என்பவற்றுடன் அரசியல் உறுதியற்ற தன்மையையும் எதிர்கொண்டுள்ளது. 

இதைப் போக்க எமது அரசியல், பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பில் தொடர்ச்சியான ஆழமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அவற்றில் விநியோக பற்றாக்குறையை குறுகிய காலத்திற்குள் நிவர்த்தி செய்தல், பொருட்கள் மற்றும் சேவை வழங்குதலை மீட்டல்  ஆகியவை அடங்கும்.

மதத்தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், வர்த்தக சமூகம், சட்டத்தரணிகள் மற்றும் வைத்தியர்கள் என பல தரப்பினரும் நெருக்கடிகளை சமாளிக்க மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களை சுட்டிக்காட்டியுள்ளார். 

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடந்த ஏப்ரல் 23 ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையில் பல சீர்திருத்த முன்மொழிவுகளை முன்வைத்துள்ளது. 

பொருளாதாரம் மற்றும் கடன் நெருக்கடியை குறுகிய காலத்தில் சமாளிக்க வேண்டும் என்பதே நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பெரும் சவாலாகும். இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ள சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், திறன் கொண்ட வலுவான மற்றும் ஸ்திரமான அரசாங்கத்தை கொண்டிருப்பது இந்த நேரத்தில் முதன்மையான தேவையாகும் என சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் கடன் மறுசீரமைப்புடன் தொடர்புடைய முன்னணி பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் நட்பு நாடுகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ளன. அவற்றிடமிருந்து நேர்மறையான பதிலும் கிடைக்கப் பெற்றுள்ளது. 

அரசியல் ஸ்திரத்தன்மையும் சமூக அமைதியும் இந்த பேச்சுவார்த்தைகளின் வெற்றிக்குத் தேவையான வலிமையையும் நம்பிக்கையையும் வளர்ப்பதற்கான முக்கிய நிபந்தனைகளாகும்.

பல நாட்களாக, தலைநகர் உட்பட நாடு முழுவதும் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, அவை பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. ரயில் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 

வைத்தியசாலைகளில் அன்றாட பணிகள் முடங்கியதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஆடைத் தொழில் உள்ளிட்ட உற்பத்தித் துறையில் பணிகள் அவ்வப்போது முடங்கிக் கிடக்கின்றன. 

மாணவர்கள் பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் வேலைக்குச் செல்வதில் சிரமப்படுகிறார்கள். இந்தப் போராட்டங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதுடன் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்துகின்றன.

பல நாட்களாக, தலைநகர் உட்பட நாடு முழுவதும் ஆவேசமான போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளன. எரிபொருள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் முடங்கியுள்ளன. ரயில் மற்றும் பொது போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. 

வைத்தியசாலைகளில் அன்றாட பணிகள் முடங்கியதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். ஆடைத் தொழில் உள்ளிட்ட உற்பத்தித் துறையில் பணிகள் அவ்வப்போது முடங்கிக் கிடக்கின்றன. 

குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் பணியாளர்கள் வேலைக்குச் செல்வதில் சிரமப்படுகிறார்கள். 

மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைப்பதுடன், இந்தப் போராட்டங்கள் பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்துகின்றன.

எனவே மக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை தொடர்ச்சியாக வழங்குதல் , என்பவற்றுக்காக பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

நெருக்கடி நிலையைத் தணிக்கும் ஒரு குறுகிய கால நடவடிக்கையாக மட்டுமே அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கிராம சேவகரின் வேலையை பொலிஸார் பார்க்கக்...

2023-12-11 13:40:57
news-image

கம்பஹாவில் நகை அடகுக் கடையில் கொள்ளை

2023-12-11 18:24:12
news-image

பெறுதிமதி சேர் வரி திருத்தச் சட்ட...

2023-12-11 17:59:32
news-image

யாழ். பல்கலை முன்னாள் கலைப்பீட மாணவர்...

2023-12-11 17:44:17
news-image

லொறியால் மோதிய வயோதிபரை வைத்தியசாலைக்கு கொண்டு...

2023-12-11 18:28:47
news-image

மதுபான சாலைகளை காட்டி சுற்றுலா பயணிகளை...

2023-12-11 18:32:29
news-image

எரிபொருள் விலை அதிகரிப்பினால் கடற்றொழிலாளர்களின் பாதிப்புக்கு...

2023-12-11 16:58:39
news-image

மலையக மக்கள் குறித்து பேச்சு வார்த்தை...

2023-12-11 16:59:13
news-image

பேலியகொடையில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது

2023-12-11 17:08:33
news-image

யாழ்.நகர் பகுதியில் அதிகரித்துள்ள வழிப்பறிக் கொள்ளை

2023-12-11 17:06:33
news-image

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு...

2023-12-11 16:00:40
news-image

பங்களாதேஷ் பெண்ணிடம் கொள்ளையிட்ட இருவர் கைது

2023-12-11 15:57:02